எகிப்தில் இஸ்மாலியா மாகாணத்தில் பொலிஸ் வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 38 பேர் காயமடைந்துள்ளார்கள்.
குறித்த சம்பவம் திங்கட்கிழமை (02) காலை இடம் பெற்றுள்ளது.
இஸ்மாலியாவில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளார்கள்.
தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை. அரசு தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த தீ விபத்தால் பாதுகாப்பு பணியகத்தின் தலைமையகத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததாக சிவில் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்த 26 பேரில், 24 பேர் மூச்சுத் திணறலாலும், இருவர் தீக்காயங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்து குறியீடுகள் அரிதாகவே செயல்படுத்தப்படுவதாலும், அவசரகால நிலைமைகள் போதான செயற்பாடுகள் தாமதமாகவும் இருப்பதால் எகிப்தியில் தீ விபத்துக்கள் அடிக்கடி இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் மின் ஒழுக்கின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM