(க.கமலநாதன்)

சிலவேளை கருணாவின் ஒத்துழைப்பு கிட்டியிருக்காவிட்டால் நாட்டின் கிழக்குப் பகுதியை புலிகளிடத்திலிருந்து மீட்க முடியாது போயிருக்கும். அதனால் அவ்வாறான ஒருவர் தலைமையில் கட்சி நிறுவப்படுவது காலோசிதமான முயற்சியாகுமென பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமைய அமைப்பின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுபப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளமையானது வரவேற்கத்தக்கதாகும். காரணம் அவர் இறுதி யுத்த காலத்தில் நாட்டின் கிழக்கு பகுதியை புலிகளிடத்திலிருந்து மீட்டெடுக்க பெரும் உதவி செய்தவர்.

தற்போது அவர் கட்சி ஆரம்பிக்க முற்படுகின்றமையானது மகிழ்ச்சிக்குரிய காரணம் புலிகளை வெற்றிகொள்ள உதவிசெய்துவிட்டு எமது தாய் தேசத்திற்கு வாழ்த்து கூறும் ஒருவர் கட்சி ஆரம்பிப்பதானது காலோசிதமான செயற்பாடாகும்.

சிலவேளை கருணாவின் ஒத்துழைப்பு கிட்டியிருக்காவிட்டால் நாட்டின் கிழக்கு பகுதியை புலிகளிடத்திலிருந்து மீட்க முடியாது போயிருக்கும். அதனால் அவ்வாறான ஒருவர் தலைமையில் கட்சி நிறுவப்படுவது காலோசிதமான முயற்சியாகும்.

அரந்தலாவ பிக்குகள் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் கருணா உள்ளார் என்று கூறப்பட்டாலும் அதனை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இல்லை. அதேபோல் 2004 ஆம் ஆண்டில் அவர் புலிகளிடத்திலிருந்து விலகி வந்தைமையும் யுத்தத்தினை வெற்றிக்கொள்ள சாதகமாக அமைந்து.

அதேபோல் கருணாவையும் அவரின் கட்சியினையும் தமிழ் மக்கள் ஏற்றாலும் ஏற்கவிடினும். தற்போது மக்களை தூண்டிவிட்டுக் கொண்டிருப்பவர்களை பார்க்கிலும் கருணா சிறந்தவர் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அதனால் கருணாவை தன்டிக்க வேண்டுமாயின் அதற்கு முன்பாக கடந்த அரசாங்கம் விடுவித்த 11 ஆயிரம் புனர்வாழ்வளித்த போராளிகளையும் தண்டிக்க வேண்டும்.

தூய்மையான நாளைக்கான அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.