யாழ்ப்பாணத்தில் மாணவ சிறுமி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கியதற்காக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் ஒருவன், மாணவியின் அண்ணனால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
13 வயதான குறித்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் தனது வகுப்பு மாணவர்களுக்கு சொக்லேட் வழங்கியுள்ளார். அவர் 14 வயதுடைய மேற்படி தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கும் சொக்லேட் வழங்கியுள்ளார். இதையடுத்தே எதற்காக சொக்லேட்டை வாங்கினாய்? என்று வினவி மாணவியின் 17 வயதுடைய அண்ணன் அந்த மாணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
மாணவியின் அண்ணனின் தவறான புரிதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுத்தனர் என்றும், தொலைபேசி வழியாக பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாட்டைப் பதிவுசெய்ய முற்பட்டபோதே முறைப்பாட்டைப் பதிவு செய்தனர் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM