இன்று (01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனத்தின் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களைச் செய்துள்ளது.
இதன்படி ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையக 6 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதன்படி புதிய விலை 420 ரூபாவாகும்.
1 லீற்றர் ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 338 ரூபாவிலிருந்து 348 ரூபாவாகவும் சுப்பர் லீற்றரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் டீசல் 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 356 ரூபாவிலிருந்து 417 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், பெற்றோல் ஒக்டேன் 92 இன் விலை திருத்தப்படவில்லை.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 04 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 365 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 351 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 421 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேபோல், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 242 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் அறிவித்துள்ளதையடுத்து, அந்த விலை திருத்தத்திற்கு அமைவாக ஐ.ஓ.சி. நிறுவனமும் விலைத்திருத்தத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM