இலண்டனில் வாடேரஸ்மீட் அரங்கில் திரு. திருமதி. சிறீகரன் தம்பதியின் புதல்வியும் கலாக்ஷேத்ரா பட்டதாரி திரிவேணி சங்கரின் மாணவியுமான குமாரி தரண்யாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி நடைபெற்றது.
நடன நாயகி தனது பாட்டனாரான ஆ.இ.யோகேஸ்வரன் எழுதிய குல தெய்வ வணக்கப் பாடல், அலாரிப்பு முதல் தில்லானா, மங்களம் வரையான உருப்படிகளுக்கு நடனமாடினார்.
இதன்போது மிருதங்க மேதை காரைக்குடி கிருஷ்ணமூர்த்தியின் இசை மற்றும் அற்புதத் தீர்மானங்களால் அலங்கரிக்கப்பட்ட அலாரிப்பு, ஷப்தம், வர்ணம், கீர்த்தனங்களில் குருவின் நடன அமைப்பும் நெறியாள்கையும் அதனை உள்வாங்கி பாவ, தாள, அங்க சுத்தத்தோடு அனுபவம் வாய்ந்த நடன மணியைப் போல் ஆடிய தரண்யாவும் வழிநடத்திய குருவும் பாராட்டுக்குரியவர்கள்.
இந்த அரங்கேற்றத்துக்காக குரு எழுதிய கீர்த்தனை வழமைக்கு மாறாக பல தீர்மானங்களைக் கொண்டு நிறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்யாணி இராகத்தில் காலஞ்சென்ற மாரிமுத்துப்பிள்ளையின் பதத்தோடு கலாக்ஷேத்ரா ஜவளி, அஷ்டபதி, தில்லானா என அனைத்து உருப்படிகளும் சிறப்பாக மகுடம் சேர்த்தன.
தரண்யா, தனது குருவான திரிவேணி சங்கரின் நடனத் திறமை அனைத்தையும் சீரிய முறையில் தன்னகப்படுத்தியமைக்கு சான்றாக தரன்யாவே நடனம் அமைத்து காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி மேதையின் ஹேமாவதி இராகம் மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த ஜதீஸ்வரத்துக்கு ஆடியமை அனைவரையும் ஈர்த்தது.
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் போல் கலாரசிகர்கள் எண்ணத்தை பிரதிபலித்தாற்போல் குரு மாணவிகளின் கலைத் திறமையில் மூழ்கி வியந்து பாராட்டினார்.
நிகழ்வுக்கு வருகை தந்த பிரதம விருந்தினர் நடன மேதை புஷ்கலா கோபால், பிரபல நடிகையும் கவிதாயினியும், கலாக்ஷேத்ரா நடன மணியுமான சிறப்பு விருந்தினர் சுகன்யா ஆகியோர் தான் கண்ட அரங்கேற்றங்களில் இது மிகச் சிறந்தது என புகழ்மாலை சூடினர்.
சிறந்த குருவின் 12 வருட வழிகாட்டலில் சிறப்பு பெற்ற மாணவியின் உழைப்பும் ஸ்ரீஹரன் குடும்பத்தின் கலை அர்ப்பணிப்பும் இலண்டன் தமிழ் நிலைய சேவையுடன் முத்தாய்ப்பாக சிறந்த அணிசேர் கலைகர்கள் வம்சி கிருஷ்ணா விஷ்ணுதாஸ், யுவகேலா பாரதி, காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி, அளவையின் ஜலதரன் சிதம்பரநாதன், டாக்டர் பிச்சையப்பா ஞானவரதன் ஆகியோரின் முழுப் பங்களிப்புடன் இந்த அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது.
- அம்பிகை க. செல்வகுமார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM