வலிந்து மூக்கை நுழைத்த அலி சப்ரி

Published By: Vishnu

01 Oct, 2023 | 07:16 PM
image

ஹரி­கரன்

கனடா பயங்­க­ர­வா­தி­களின் புக­லி­ட­மாக மாறி வரு­கி­றது என, நியூ­யோர்க்கில் இருந்து கொண்டு, இந்­திய ஊட­க­மான ஏ.என்.ஐக்கு வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி வெளி­யிட்ட கருத்து சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ளது.

காலிஸ்தான் புலிப்­படை என்ற சீக்­கிய அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கன­டாவில்  படு­கொலை செய்­யப்­பட்­டதன் பின்­ன­ணியில், இந்­திய அர­சாங்கம் இருப்­ப­தாக, கனே­டிய பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்­றம்­சாட்­டி­யதை அடுத்து, இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வுகள் பாதிப்­ப­டைந்­துள்­ளன.

இரண்டு நாடு­க­ளுக்கும் ஏட்­டிக்குப் போட்­டி­யாக, இரா­ஜ­தந்­திர எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றன.

கனே­டிய மண்ணில் நிகழ்த்­தப்­பட்ட இந்தக் கொலையின் மூலம் - தங்­களின் இறைமை மற்றும் தங்­களின் குடி­மக்­களின் பாது­காப்பை கேள்­விக்­குள்­ளாக்­கப்­ப­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது என்று ட்ரூடோ கூறி­யி­ருந்தார்.

இந்­தி­யாவோ இந்தக் கொலைக்கும் தங்­க­ளுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி வரு­கி­றது.

இந்­தி­யா­வுக்கும் கன­டா­வுக்கும் இடையில் தோன்­றி­யி­ருக்­கின்ற இந்தப் பூசல், சர்­வ­தேச அரங்கில் கடு­மை­யான கரி­ச­னை­களைத் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

ஏனென்றால், அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­லக கூட்­ட­ணியில் கனடா மிக முக்­கி­ய­மான நாடு.

அதே­வேளை, இந்­தியப் பெருங்­க­டலில் அமெ­ரிக்கா தனது நம்­ப­க­மான கூட்­டா­ளி­யாக இந்­தி­யாவை கரு­து­கி­றது.

இவ்­வாறு அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கு­ல­கத்­துக்கு மிகவும் வேண்­டப்­பட்ட- முக்­கி­ய­மான இரண்டு நாடுகள் தங்­க­ளுக்குள் மோதிக் கொள்­வது அவற்­றுக்கு கவ­லை­க­ளையும் குழப்­பத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா போன்ற நாடுகள் இந்த விவ­கா­ரத்தில் எந்­த­வொரு தரப்­பையும் கடிந்து கொள்­ளவோ, சார்பு நிலைப்­பாட்டை எடுக்­கவோ  இல்லை.

கன­டா­வுக்கு சாத­க­மாக நடந்து கொண்டால், இந்­தியா கோபிக்கும், இந்­தி­யா­வுக்கு சாத­க­மாக கருத்து வெளி­யிட்டால் கனடா முரண்டு பிடிக்கும்.

எனவே, எந்­த­வொரு தரப்­பையும் சாராமல், காய்­களை நகர்த்­து­வது தான் புத்­தி­சா­லித்­த­ன­மான அணு­கு­மு­றை­யாக கரு­து­கின்­றன. வல்­ல­ர­சு­களே நிதா­ன­மான போக்கை வெளி­யிட, இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி, கன­டா­வுக்கு எதி­ராக கருத்தை வெளி­யிட்­டி­ருப்­ப­துடன், இந்­தி­யாவின் பக்கம் நிற்­ப­தா­கவும் காட்டிக் கொண்­டி­ருக்­கிறார்.

இந்­தியா எதிர் கனடா இடை­யி­லான இந்த இரா­ஜ­தந்­திர மோத­லுக்குள், இலங்­கையும் இப்­போது வலிந்து இழுத்துச் செல்­லப்­பட்­டுள்­ளது.

கடந்த மே மாதம், முள்­ளி­வாய்க்கால் படு­கொலை நினை­வேந்தல் இடம்­பெற்ற போது, கனே­டியப் பிர­தமர், ஜஸ்டின் ட்ரூடோ, தமி­ழர்கள் இனப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­ட­தாக அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்தார்.

அந்த அறிக்­கைக்கு இலங்கை அர­சாங்­கத்­தினால் கண்­டனம் தெரி­விக்­கப்­பட்­டது. அவ்­வாறு இலங்­கையில் இனப்­ப­டு­கொலை இடம்­பெ­ற­வில்லை என்று வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி கூறி­யி­ருந்தார். இந்த விவ­கா­ரத்தில் ஏற்­க­னவே கன­டா­வுடன் முரண்டு பிடித்த அலி சப்ரி இப்­போது இந்­தி­யாவின் பக்கம் சார்ந்து கருத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

கனே­டிய மண்ணில் நடந்த ஒரு கொலையை - அந்த நாடு தீவி­ர­மாக எடுத்துக் கொண்­டி­ருக்­கி­றது.

தமது நாட்டின் இறை­மைக்கும், தமது குடி­மக்­களின் உயி­ருக்கும் ஆபத்து ஏற்­படும் போது- எந்த நாடும் இவ்­வா­றான பிர­தி­ப­லிப்­பையே வெளி­யிடும்.

இலங்­கையில் ஒருவர் கொலை செய்­யப்­படும் போது, அதில் வெளி­நாட்டுத் தொடர்­புகள் இருந்தால்- இலங்கை அர­சாங்கம் அதனை சாதா­ர­ண­மாக எடுத்துக் கொள்­ளாது.

அதுவும் வெளி­நாட்டுப் புல­னாய்வு அமைப்பு ஒன்று தொடர்­பு­பட்­டி­ருந்தால், ஆபத்­தா­ன­தாக கரு­தாமல் விடாது.

பொறுப்­புக்­கூறல் தொடர்­பான விசா­ர­ணை­களில் வெளி­நாட்டு நீதி­ப­திகள் பங்­கேற்­ப­தையே எதிர்க்­கின்ற- இறைமை பறிபோய் விடும் என குரல் எழுப்­பு­கின்­ற­வர்கள், இன்­னொரு நாட்டின் புல­னாய்வுப் பிரி­வினர் கொலை­களில் ஈடு­பட்டால் சகித்துக் கொள்­வார்­களா?

அதனை அலி சப்ரி புரிந்து கொள்­ள­வில்லை. இந்­தி­யா­வுக்கு அடுத்­த­தாக, உலகில் அதி­க­ளவில் சீக்­கி­யர்கள் வாழு­கின்ற நாடு கனடா. இவ்­வா­றான நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை­யுடன் நின்று போகுமா, இன்னும் கொலைகள் தொட­ருமா என கவலை கொள்ளக் கூடிய நிலையில் கனடா இருப்­பதை மறந்து விட முடி­யாது.

கன­டாவில் தமி­ழர்கள் சக்­தி­வாய்ந்த புலம்­பெயர் சமூ­க­மாக உரு­வெ­டுப்­பதை  இலங்கை அரசு அச்­சத்­துடன் நோக்­கு­வது போலவே, கன­டாவில் சீக்­கிய பிரி­வி­னை­வாத அமைப்­பு­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­டு­வ­தையும் இந்­தியா விரும்­ப­வில்லை.

அதன் தொடர்ச்­சி­யாக இந்தக் கொலை இடம்­பெற்­றி­ருக்­கலாம் என்றும் ஒரு கொலை­யுடன் அது நின்று போகும் என்ற நம்­பிக்கை காணப்­பட்டால், கனடா சில­வேளை அதனை கண்­டு­கொள்­ளாமல் போயி­ருக்­கலாம்.

ஆனால், அங்கு சீக்­கிய சமூகம் வலு­வாக காலூன்­றி­யி­ருப்­பதால், அவர்கள் மத்­தியில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் அதி­க­ளவில் இடம்­பெறும் சூழல் காணப்­பட்­டது. அது கன­டாவைப் பொறுத்­த­வ­ரையில் பாது­காப்பு அச்­சு­றுத்தல் மாத்­தி­ர­மல்ல, சட்டம் ஒழுங்­கையும் கேள்­விக்­குட்­ப­டுத்­த­வ­தாக இருக்கும்.

அதனால் இந்­தி­யா­வுடன் நேர­டி­யாக முட்டிக் கொள்­வதை தவிர, கன­டா­வுக்கு வேறு வழி­யி­ருக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில், இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சர் கன­டா­வுக்கு எதி­ரா­கவும் இந்­தி­யா­வுக்கு ஆத­ர­வா­கவும் நிற்­ப­தற்கு இரண்டு முக்­கி­ய­மான கார­ணங்கள் உள்­ளன.

388 உறுப்­பி­னர்­களைக் கொண்ட கனே­டிய பாரா­ளு­மன்­றத்தில் 18 சீக்­கி­யர்கள் அங்கம் வகிக்­கின்­றனர். இந்­திய பார­ளு­மன்­ற­மான லோக்­ச­பாவில் கூட 13 உறுப்­பி­னர்கள் தான் இருக்­கின்­றனர்.

சுமார் 8 இலட்­சத்­துக்கும் சற்று குறை­வான எண்­ணிக்­கையைக் கொண்ட சீக்­கி­யர்கள் பேசு­கின்ற பஞ்­சாபி மொழி, கன­டாவில் ஆங்­கிலம், பிரெஞ்சு மொழி­க­ளுக்கு அடுத்து மூன்­றா­வ­தாக அதி­க­ளவு மக்­களால் பேசப்­படும்  மொழி­யாக இருக்­கி­றது.

சீக்­கி­யர்­களைப் போலவே, இலங்கைத் தமி­ழர்­களும் கன­டாவில் வலு­வா­ன­தொரு புலம்­பெயர் சமூ­க­மாக மாறி­யி­ருக்­கி­றது.

சுமார் இரண்­டரை இலட்சம் தமி­ழர்கள் கன­டாவில் வசிக்­கின்ற நிலையில், கனே­டிய பாரா­ளு­மன்­றத்தில் தமி­ழர்கள் ஒரு ஆச­னத்தைக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

கனே­டிய புலம்­பெயர் சமூகம் இப்­போது ஒன்­டா­ரியோ மாகாண சட்­ட­மன்­றத்தில் இணை அமைச்சர் பத­வி­யையும், பாரா­ளு­மன்­றத்தில் அமைச்சர் பதவி ஒன்­றையும் பெற்றுக் கொள்ளும் அள­வுக்கு வலு­வ­டைந்­தி­ருக்­கி­றது.

புலம்­பெயர் கனே­டி­யர்கள் பெரும்­பாலும் விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆத­ர­வாக இருந்­த­வர்கள் என்­ப­தாலும், இன்­னமும் அவர்கள் தமிழ்த் தேசிய உணர்­வுடன் இருப்­ப­தாலும் இலங்கை அர­சாங்கம் அவர்­களை அச்­சு­றுத்­த­லுக்­கு­ரி­யர்­க­ளா­கவே பார்க்­கி­றது.

போர்க்­கால மீறல்­க­ளுக்கு சர்­வ­தேச நீதி கோரும் செயற்­பா­டு­க­ளுக்கு கன­டாவில் இருந்து தமி­ழர்கள் அழுத்தம் கொடுப்­ப­தாக, தமக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தாக இலங்கை அர­சாங்கம் கரு­து­கி­றது.

இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ரான இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு கனடா களம் அமைத்துக் கொடுத்­தி­ருக்­கி­றது என்­பது, கன­டாவை பயங்­க­ர­வா­தி­களின் புக­லி­ட­மாக அலி சப்ரி அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்கு முக்­கிய காரணம் ஆகும்.

ஆனால், கனடா, பயங்­க­ர­வாத தொடர்­பு­க­ளு­டைய எவ­ரையும், பகி­ரங்­க­மாக செயற்­பட அனு­ம­திக்­க­வில்லை. அவ்­வாறு செயற்­பட முனைந்­த­வர்­களை கைது செய்து நட­வ­டிக்கை எடுக்­காமல் இருந்­ததும் இல்லை.

ஆனாலும் கனடா மீதான இலங்­கையின் வன்மம் குறை­ய­வில்லை.

போர்க்­கால மீறல்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்டும் என்று தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரும் கனடா, ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் அது தொடர்­பான தீர்­மா­னங்­களைக் கொண்டு வந்து நிறை­வேற்­று­வ­திலும் தீவிர கவனம் செலுத்தி வரு­கி­றது.

கன­டாவின் இந்த செயற்­பாடு இலங்கை அர­சாங்­கத்­துக்கு தொடர்ச்­சி­யாக அழுத்­தங்­களைக் கொடுப்­ப­தாக இருக்­கி­றது.   இது, இலங்­கையின் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு கனடா தொடர்­பாக இருந்து வரு­கின்ற கடுப்­புக்கு இரண்­டா­வது காரணம்.

அலி சப்­ரியைப் பொறுத்­த­வ­ரையில், இன்னும் அதி­க­மா­கவே கனடா மீது அவ­ருக்குக் காழ்ப்­பு­ணர்வு இருக்­கலாம்.

அதற்கு முக்­கி­ய­மான காரணம் ராஜபக் ஷவி­ன­ருடன் அவ­ருக்கு உள்ள நெருங்­கிய தொடர்பு.

அலி சப்ரி நாடா­ளு­மன்­றத்­துக்கு வரு­வ­தற்கு முன்னர், ராஜபக் ஷவி­னரின் சட்­டத்­த­ர­ணி­யா­கவே இருந்தார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலத்தில் ராஜபக் ஷவி­ன­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்ட வழக்­கு­களில், முன்­னி­லை­யாகி அவர்­களைப் பாது­காப்­பதில் முக்­கிய பங்கு வகித்­தவர் அவர்.

குறிப்­பாக, கோட்­டா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ராக தொட­ரப்­பட்ட வழக்­கு­களை முழு­மை­யாக கையாண்­டவர் அலி சப்ரி தான். அதற்­கான பிரதி உப­கா­ர­மாக  கோட்­டா­பய ராஜபக் ஷவினால் அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்டு, அமைச்சர் பத­வியும் வழங்­கப்­பட்­டது. அந்த இராஜ விசு­வாசம் அவ­ரிடம் இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், கோட்டாபய ராஜபக் ஷவை பாதுகாத்தது தனது வாழ்நாளின் முக்கியமான சாதனை என்று குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இவ்வாறான ராஜபக் ஷ விசுவாசிக்கு கனடாவின் மீது காழ்ப்பு வருவதற்கு மற்றொரு காரணம் இருக்கலாம்.

மஹிந்த ராஜபக் ஷவையும், கோட்டாபய ராஜபக் ஷவையும் கனடா அண்மையில் கறுப்புப் பட்டியலில் சேர்த்து பயணத்தடை விதித்திருப்பது தான் அந்த காரணம். ராஜபக் ஷவினரை கறுப்புப் பட்டியலில் சேர்த்ததை கண்டித்த அலி சப்ரி, தீவிரவாதிகளின் புகலிடம் என கனடாவை விமர்சித்தது ஆச்சரியமில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் கனடாவுக்கு எதிராக கருத்தை வெளியிட்டு இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முற்படுவதற்கும் காரணங்கள் உள்ளன.

எவ்வாறாயினும், கனடிய- இந்திய மோதல் நிரந்தரமானதாக இருக்கும் எனக் கூற முடியாது.

இதற்குள் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு இலங்கை தன்னைத் தானே அந்நியப்படுத்திக் கொள்ளப் போகிறது போலவே தெரிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கில் சுதந்திரமான ஆலய வழிபாட்டுக்கும் ...

2024-02-28 18:04:16
news-image

பத்தாயிரம் வீட்டுத்திட்டமும் பத்து பேர்ச் காணி...

2024-02-28 13:52:19
news-image

பூமியின் நுரையீரலில் மிக பெரிய அனகொண்டா

2024-02-28 11:03:34
news-image

அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்

2024-02-27 14:27:33
news-image

இலங்கையில் பெண் கைதிகள் சடுதியாக அதிகரிப்பு…!

2024-02-27 13:50:28
news-image

இனி என்னை அப்பா என்று யார்...

2024-02-27 12:10:48
news-image

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை மோசடிகளால் அழிகிறதா?

2024-02-27 16:00:41
news-image

ரஃபா எல்லைக் கடவையும் எகிப்து மற்றும்...

2024-02-26 16:15:11
news-image

அதிகாரத்துக்காக மக்கள் ஆணையைப் பறித்தல்

2024-02-26 15:48:00
news-image

ஆடி அடங்கிய பின் பிறக்கின்ற ஞானம் 

2024-02-26 15:36:27
news-image

விலகும் புதைகுழி மர்மம்

2024-02-26 15:15:32
news-image

சிங்கள இனவாதிகளின் தெரிவு

2024-02-26 15:06:18