இலங்கையின் எதிர்பார்ப்பு தகர்ந்தது

Published By: Vishnu

01 Oct, 2023 | 01:01 PM
image

(நெவில் அன்தனி)

சீனாவின் ஹங்ஸோவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவில் 400 மீற்றர் ஓட்டப் போட்டி மெய்வல்லுர் நிகழ்ச்சிகளில் ஆண், பெண் இருபாலாரிலும் இலங்கை பதக்கம் பெறத் தவறியது.

இலங்கைக்கு பதக்கம் பெற்றுக்கொடுக்கக் கூடியவரக்ள் என எதிர்பார்க்கப்பட்ட காலிங்க குமாரகே, நடீஷா ராமநாயக்க ஆகிய இருவரும் பாஹ்ரெய்ன், சீனா, ஜப்பான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மெய்வல்லுநர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வி அடைந்தனர்.

சனிக்கிழமை மாலை நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 53.72 செக்கன்களில் நிறைவு செய்த நடீஷா ராமநாயக்க 5ஆம் இடத்தைப் பெற்றார்.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய அருண தர்ஷன, காலிங்க குமாரகே ஆகிய இருவரும் முறையே 6ஆம், 7ஆம் இடங்களைப் பெற்றனர்.

400 மீற்றர் ஓட்டப் போட்டியை அருண தர்ஷன 46.09 செக்கன்களிலும், காலிங்க குமாரகே 46.22 செக்கன்களிலும் நிறைவுசெய்தனர்.

இலங்கை சார்பாக பங்குபற்றிய மூவரும் தத்தமது சிறந்த நேரப் பெறுதிகளிலும் பார்க்க மோசமான நேரப் பெறுதிகளையே பதிவுசெய்தனர்.

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பாஹரெய்ன் வீராங்கனைகளான அடேகோயா ஒலுவாக்கேமி முஜிடாத் (50.66 செக்.) தங்கப் பதக்கத்தையும் சல்வா ஈத் நாசர் (50.92 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் மலேசியாவின் ஷெரின் செம்சன் வல்லபோய் (52.58 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்தியாவின் மிஷ்ரா ஐஷ்வரியா கைலாஷ் (53.50 செக்.) 4ஆம் இடத்தைப் பெற்றார்.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் சவூதி அரேபிய வீரர் யூசெப் அஹ்மத் மஸ்ராஹி (45.55 செக்.) தங்கப் பதக்கத்தையும் ஜப்பான் வீரர் கென்டாரோ சாட்டோ (45.57 செக்.), பாஹ்ரெய்ன் வீரர் யூசுப் அபாஸ் அலி (45.65 செக்.) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

மற்றொரு ஜப்பான் வீரர் ஃப்யூகா சாட்டோ (45.70 செக்.) 4ஆம் இடத்தையும் இந்திய வீரர் மொஹமத் அஜ்மால் வாரியதோடி (45.97 செக்.) 5ஆம் இடத்தையும் பெற்றனர்.

கயன்திகா அபேரட்ன இன்று பங்கேற்பு

இன்று மாலை நடைபெறவுள்ள பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயன்திகா அபேசேகர பங்குபற்றவுள்ளார். ஆனால், அவருடன் போட்டியிடுபவர்களில் இருவர் மாத்திரமே கயன்திகாவை விட சிறந்த நேரப் பெறுதியைக் கொண்டுள்ளனர். எனினும் கயன்திகா அதிக பிரயாசை எடுத்துக்கொண்டால் மாத்திரமே அவரால் பதக்கம் வெல்லக்கூடியதாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மும்பையில் 'ஆசிய Dueball சம்பியன்ஷிப் 2023'...

2023-12-07 15:46:03
news-image

ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை...

2023-12-07 12:14:41
news-image

விக்கெட்டை நோக்கி சென்ற பந்தை கையால்...

2023-12-06 14:47:13
news-image

ஆசிய கிண்ணப்போட்டிகளுக்காக19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட்...

2023-12-06 11:27:18
news-image

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவர் உபுல்தரங்க

2023-12-04 19:55:56
news-image

சென்னை புயல் ; தனது இரண்டாவது...

2023-12-04 15:45:59
news-image

மகளிருக்கான 'மேஜர் கிளப்' 50 ஓவர்...

2023-12-04 15:07:17
news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2023-12-01 16:52:21
news-image

கிரிக்கெட் அரங்கில் வரலாறு படைத்த உகாண்டா...

2023-12-01 15:30:34
news-image

மேஜர் லீக் ரக்பி தொடர் நாளை...

2023-11-30 17:43:19
news-image

'ஸ்ரீ லங்கா யூத் லீக் 2023'...

2023-11-30 13:51:56
news-image

தனுஸ்கவை மற்றுமொரு சட்டத்தின் கீழ் சிக்கவைப்பதற்குஅவுஸ்திரேலிய...

2023-11-29 14:37:50