இங்­கி­லாந்து “ஏ“ அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை “ஏ“ அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்­கி­லாந்து ஏ இலங்கை ஏ அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யா­ட­வுள்­ளது.

இந்தப் போட்டித் தொடர் எதிர்­வரும் 17ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்கை ஏ அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர் விபரங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கும் இழுபறி நிலைகளுக்கும் மத்தியில் இன்று இலங்கை ஏ அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வாவின் பெயரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இக் குழாமில் 7 துடுப்பாட்டவீரர்களும் 4 வேகப்பந்து வீச்சாளர்களும் 4 சுழற்பந்து வீச்சாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து ஏ அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை ஏ அணி குழாம் வருமாறு,

தனஞ்சய டி சில்வா ( அணித் தலைவர் ), திமுத்து கருணாரத்ன, உதார ஜயசுந்தர, சதுன் வீரக்கொடி ( விக்கெட் காப்பாளர் ), சரித் அசலன்க, ரோஷேன சில்வா, லகிரு கமகே, கசுன் ராஜித்த, ரொன் சந்திரகுப்தா, கசுன் மதுஷங்க, அசித்த பெர்னாண்டோ, டில்ருவான் பெரேரா, அமில அப்பொசோ, ஜெப்ரி வெண்டர்சே, மலிங்க புஷ்பகுமார ஆகியோர் இக் குழுாமில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.