உலக இதய நாளை முன்னிட்டு மருத்துவ துறையினர், சுகாதார துறையினர் என அனைவரும் மக்களின் இதய நலம் குறித்த விழிப்புணர்வை வெவ்வேறு வடிவில் ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதய ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ கீழ்க்கண்ட எளிய வழிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என இதய நல சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
கருவில் உருவானதிலிருந்து உலகத்திலிருந்து மறையும் வரை விடாமல் இயங்கி வருவது இதயமும், இதயத்துடிப்பும் தான். இந்த இதயத்தை நாம் ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டும்.
முதலில் சிறு வயது முதல் முதிய வயது வரை உள்ளவர்கள் தங்களின் உடல் எடையை சீராக பேண வேண்டும். உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்திருக்கும் வகையில் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை இயல்பாக பராமரிக்க வேண்டும்.
இன்றைய திகதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினர் தங்களது வாழ்வியல் நடைமுறைகளை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதாலும், தங்களது உணவு முறையை மேலத்தேய கலாச்சாரத்தின் படி பின்பற்றுவதாலும், குறிப்பிட்ட வயதிற்கு முன்னரே இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும் என்றால் எம்முடைய முன்னோர்கள் பரிந்துரைத்த ஊட்டச்சத்துள்ள பாரம்பரிய உணவு முறையை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் இன்றைய திகதியில் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், இல்லத்திலிருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கும், பணி தொடர்பான நேர கெடு விதிக்கப்படுவதால்... இவர்களுக்கு ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய ரத்த அழுத்த பாதிப்பு தற்போது தடுக்க இயலாத உயிர் கொல்லி நோயாகவும் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இதனை இவர்கள் தொடர்ந்து அலட்சியப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்த பாதிப்பாகி, அது இதயத்தின் ஆரோக்கியத்தை சிதைக்கிறது. எனவே ரத்த அழுத்த அளவை சீராக பராமரிப்பதற்கான வழிமுறைகளை மருத்துவர்களிடமிருந்து ஆலோசனையாக பெற்று அதனை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.
அதே தருணத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் பசியாறும்போது பீட்சா, பர்கர் போன்ற அதீத கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு சத்துள்ள உணவுகளை அகால வேலைகளிலும், இயல்பான அளவைவிட அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் எம்முடைய உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு சத்து இயல்பான அளவைவிட கூடுதலாக சேகரமாகி இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே அதிக கொழுப்புள்ள உணவுப் பொருளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி நாளாந்தம் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது உங்களுடைய மூளையில் சுரக்கும் ஹோர்மோன்கள்... இதய ஆரோக்கியத்திற்கு வலிமை சேர்ப்பதால் இந்த பயிற்சியை நாளாந்த மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். வயதில் இளையவராக இருந்தால்.. அதாவது நாற்பது வயதிற்குள் இருந்தால்... நீச்சல் பயிற்சி செய்வது கூட இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
உங்களுடைய உடல் உறுப்புகள் தங்களை புதுப்பித்துக் கொள்வதற்கு உங்கள் உடல் ஓய்வு எடுக்கும் தருணத்தை தெரிவு செய்து கொள்கிறது. இதனால் தான் ஒவ்வொருவரும் நாளாந்தம் இரவு நேரத்தில் தொடர்ச்சியாக 6 மணி தியாலம் முதல் 7 மணி தியாலம் வரை உறங்க வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள். நீங்கள் உறங்கி இருக்கும் நேரத்தில் உங்களுடைய உடல் உறுப்புகளில் குறிப்பாக இதயம் சார்ந்த உறுப்புகள் தங்களை புதுப்பித்துக் கொள்வதால்... இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. எனவே இதய ஆரோக்கியத்திற்கு நல்ல உறக்கமும் ஒரு பிரதான காரணியாக திகழ்கிறது.மாணவ மாணவிகள் முதல், வீட்டில் ஓய்வெடுக்கும் மூத்த குடும்ப உறுப்பினர்கள் வரை தவறாமல் உச்சரிக்கும் வார்த்தை மன அழுத்தம். இந்த மன அழுத்தம் ஏற்பட்டாலும் இதயத்தின் ஆரோக்கியத்தையும், இதய நாளங்களின் ஆரோக்கியத்தையும், இதய தசைகளின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். எனவே மன அழுத்தத்தை முற்றாக தவிர்த்து, மனதை இயல்பாக வைத்துக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் விழிப்புணர்வு இருந்தாலும் சாகசம் செய்யும் மனநிலையில் அவர்கள் இருப்பதால் புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் பெசனாகவும்.. பிறகு அது தவிர்க்க இயலாத பழக்கமாகவும் மாறிவிடுகிறது. இவை ரத்த நாளங்களை நேரடியாக பாதித்து, அடைப்பை ஏற்படுத்தி.. இதய ஆரோக்கியத்தை சிதைத்து, உயிரிழப்பிற்கு வித்திடுகிறது. அதனால் புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் முற்றாக தவிர்க்க வேண்டும். புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருந்தாலும் அந்தப் புகையை நாம் சுவாசித்தாலும் எம்முடைய இதய நலமும் பாதிக்கப்படும். எனவே புகை பிடிப்பவர்களிடம் எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வேறு சிலருக்கு மரபணு கோளாறு காரணமாக இதயம் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதாவது எம்முடைய பெற்றோர்களுக்கு 50 வயதிற்குள்ளாக மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... அவர்களுடைய வாரிசிற்கு அவர்களை விட 10 வயது முன்னதாகவே அத்தகைய இதே பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகம். இதனால் மரபணு கோளாறு காரணமாக இதய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறு இருந்தால், அதனை முன்னரே உணர்ந்து அதற்கான பிரத்யேக பரிசோதனை மேற்கொண்டு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிகிச்சையை பெற வேண்டும்.
டொக்டர் துர்கா தேவி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM