நீதித்துறையை அரசு சீரழிக்கிறது ; நீதிபதியின் வெளியேற்றம் குறித்து வெளிப்படை விசாரணை தேவை - ஐக்கிய மக்கள் சக்தி 

30 Sep, 2023 | 08:35 PM
image

ஆர்.ராம்

பொருளாதாரத்தினை சீரழித்த அரசாங்கம் தற்போது நீதித்துறையையும் சீரழித்து வருவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விசனம் தெரிவித்துள்ளதோடு, நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகள் தேவையென்றும் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,

மக்கள் எழுச்சியின் பின்னர் பதவியேற்ற அரசாங்கம் பொருளாதார ரீதியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது அதிகாரத்தினை தக்கவைத்துக்கொள்வதகான முயற்சிகளை எடுத்துவருகின்றது. 

அதற்காகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் ஆகியவற்றை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில், சரியான திட்டமிடல்கள் இல்லாது எடுக்கப்பட்ட தீர்மானங்களால் நாட்டின் பொருளாதாரத்தினை சீர்செய்ய முடியாது சீர்குலைத்துள்ள நிலையில் தற்போது நீதித்துறையையும் சீர்ழிக்க ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நீதிபதிகளை பாராளுமன்றத்திற்கு வரவழைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தி அச்சறுத்தலை விடுத்துள்ளதோடு, பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் ஆகியவற்றின் ஊடாக சுயாதீன நீதித்துறையை கேள்விக்குட்படுத்தி வருகின்றது. 

இவ்வாறான நிலையில், தற்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பணியாற்றிய நீதிபதி தனக்கு உயிரச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டு நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். ஆகவே அவரின் வெளியேற்றம் சம்பந்தமாகவும், அவருக்கு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களை வழங்கிய தரப்புக்கள் தொடர்பிலும் உண்மையான விடயங்களை கண்டறிவதற்கான வெளிப்படைத்தன்மையான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4...

2024-09-15 18:16:57
news-image

வடகிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை...

2024-09-15 17:32:34
news-image

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து முழுமையாக...

2024-09-15 17:08:26
news-image

முறையான இலவச சுகாதார சேவைக்காக ஐக்கிய...

2024-09-15 17:17:38
news-image

ஒரு மில்லியன் தொழில் முனைவோர் திட்டம்...

2024-09-15 16:50:27
news-image

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம்...

2024-09-15 18:29:23
news-image

24 மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்...

2024-09-15 16:57:39
news-image

கட்டுகஸ்தோட்டையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு 

2024-09-15 16:17:53
news-image

யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரப்பகிர்வுடன்...

2024-09-15 17:48:43
news-image

கல்கிஸ்ஸையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-09-15 15:52:43
news-image

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு ஆலோசகர்...

2024-09-15 15:34:37
news-image

அரலகங்வில பகுதியில் காட்டுயானை தாக்கி ஒருவர்...

2024-09-15 15:25:01