இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட கலையரசனின் 'கொலை சேவல்' பட ஃபர்ஸ்ட் லுக்

30 Sep, 2023 | 08:14 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான கலையரசன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் கொலை சேவல்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டிருக்கிறார்.‌

அறிமுக இயக்குநர் வி. ஆர். துதிவாணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கொலை சேவல்'. இதில் கலையரசன், தீபா பாலு, பால சரவணன், 'அசுரன்' வெங்கட், கஜராஜ், ஆதவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாந்தன் இசையமைத்திருக்கிறார். அழகான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் பி பிலிம்ஸ் என்னும் பட நிறுவனம் சார்பில் ஆர். பி. பாலா மற்றும் கௌசல்யா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' அழகான காதல் கதையை அனைவரும் ரசிக்கும் வகையில் சொல்லி இருக்கிறோம். காதலுடன் சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்து ஒன்றையும் பதிவிட்டிருக்கிறோம். இப்படத்தில் உச்சகட்ட காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30
news-image

நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா?...

2025-03-13 10:29:57
news-image

மாதவன் நடிக்கும் 'டெஸ்ட்' படத்தின் சிங்கிள்...

2025-03-12 15:38:17
news-image

இலங்கை மக்கள் அன்பானவர்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்;...

2025-03-12 17:05:46
news-image

நடிகை பாவனா நடிக்கும் 'தி டோர்'...

2025-03-12 15:35:09
news-image

படவா - திரைப்பட விமர்சனம்

2025-03-12 11:29:42
news-image

சத்யராஜ் - சசிகுமார் - பரத்...

2025-03-12 21:10:29
news-image

நடிகர் 'கயல்' வின்சென்ட் நடிக்கும் 'அந்தோனி...

2025-03-11 17:36:01