விஜய் அண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

30 Sep, 2023 | 08:11 PM
image

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஹிட்லர்' எனும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் தனா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஹிட்லர்'. 

இதில் விஜய் அண்டனி, ரியா சுமன், சரண்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

நவீன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்திருக்கிறார். பரபரப்பான திரில்லர் ஜேனரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை  செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் எனும் பட நிறுவனம் சார்பில் டி. டி. ராஜா மற்றும் டி. ஆர். சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் அண்டனியின் அர்த்தமுள்ள பார்வையுடன் கூடிய தோற்றம்.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்