சுந்தர் சி நடிக்கும் 'அரண்மனை 4' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

30 Sep, 2023 | 08:10 PM
image

இயக்குநரும், நடிகருமான சுந்தர் .சி கதையின் நாயகனாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'அரண்மனை 4' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமான படைப்புகளை உருவாக்கி தனித்துவமான இயக்குநர் என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கும் இயக்குநரும், நடிகருமான சுந்தர் .சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அரண்மனை 4'. இதில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, வி டி வி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, 'கே ஜி எஃப்' ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், எஸ். நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். 

இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். ஹாரர் மூவியாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏசிஎஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அரண்மனை படத்தில் முதல் மூன்று பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பை போல் இந்த நான்காம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ராகவா லாரன்ஸ்க்கு காஞ்சனா திரைப்படம் எப்படி ஒரு வெற்றிகரமான படைப்பாக தொடர்ந்து அமைந்து வருகிறதோ... அதே போல் சுந்தர் சிக்கும் அரண்மனை படத்தின் தொடர் படைப்புகள் வெற்றிகரமாக அமைந்திருக்கிறது. மீண்டும் பேயை நம்பி இருக்கும் சுந்தர் சி யை, பேயும்... பேயை ரசிக்கும் ரசிகர்களும்... காப்பாற்றுவார்கள் என நம்புவோமாக..!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right