வட மாகாண சுற்றுலாப் பயணியகம், தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு வட மாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் சுற்றுலாக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை (29) காலை 9 மணி முதல் யாழ்ப்பாணம் மத்திய கலாசார மையத்தில் வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்துகொண்டு கண்காட்சிக்கூடங்களை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
அத்தோடு, வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் வனஜா செல்வரட்ணமும் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதில் 18 உணவு சார்ந்த பொருட்கள், 25 கைவினை சார்ந்த உற்பத்திப் பொருட்களை கொண்ட கண்காட்சிக்கூடாரங்கள் உள்ளடங்கலாக 43 உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சிக்கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், மாலை வேளையில் எமது கலை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM