பிரபாஸ் நடிக்கும் 'சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்' படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு

30 Sep, 2023 | 03:08 PM
image

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சலார் - பார்ட் 1 சீஸ்ஃபயர்' படத்தின் புதிய வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'கே ஜி எஃப்' படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கி, மாபெரும் வெற்றியை பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்'. இதில் பிரபாஸுடன் ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு, பிரித்விராஜ் சுகுமாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.‌

இத் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.‌ இந்தத் திரைப்படம் இதற்கு முன் செப்டம்பர் 28ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாததால், புதிய வெளியீட்டு திகதி பின்னர் அறிவிக்கப்படும் என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது.

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் - இயக்குநர் பிரசாந்த் நீல் - ஹோம்பாலே ஃபிலிம்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் 'சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்'  படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.‌

இதனிடையே  ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான கே ஜி எஃப் படத்தின் முதல் பாகம் டிசம்பர் 20ஆம் திகதியன்று வெளியாகி பெரும் வரவேற்பையும், பிரம்மாண்டமான வசூல் வெற்றியும் பெற்றது. இதனால் டிசம்பர் மாதம் வெற்றிக்கான சென்டிமென்ட் இருக்கிறது என நம்பி பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்' எனும் படமும் வெளியிடப்படுகிறது என திரையுலக வணிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right