கால்பந்தாட்ட மேம்பாட்டிற்காக ஒத்துழைப்பு வழங்கத் தயார் : தேர்தல் முடிவின் பின் தக்ஷித்த தெரிவிப்பு

30 Sep, 2023 | 01:18 PM
image

(நெவில் அன்தனி)

கால்பந்தாட்ட விளையாட்டின் மேம்பாட்டை முன்னிட்டு எங்களாலான சகலவிதமான ஒத்துழைப்பையும் வழங்கத் தயார். எங்களுடன் இருக்கும் லீக்குகள் உட்பட ஏனைய லீக்குகள் ஊடாக ஒத்துழைப்பு வழங்குவோம். ஆனால், அந்தத் தரப்பினரின் நிர்வாக செயற்பாடுகளில் நான் இணையமாட்டேன். எனது குழுவில் உள்ளவர்களும் இணையமாட்டார்கள் என தக்ஷித்த சுமதிபால தெரிவித்தார்.

இலங்கை மன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் நடைபெற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

தொடர்ந்து பேசிய தக்ஷித்த சுமதிபால,

'தேர்தல் முடிவு எமக்கு பாதமாக இருந்தபோதிலும் அதனால் நாங்கள் துவண்டுவிடமாட்டோம். தொடர்ந்தும் கால்பந்தாட்ட விளையாட்டின் மேம்பாட்டிற்காக எமது பணிகளைத் தொடர்வோம். அடுத்த தேர்தல் வரை என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். நாட்டில் கால்பந்தாட்டத்தை பலப்படுத்த நாங்கள் எடுத்துவரும் முயற்சிகளை தொடர்வோம்.

'எம்மோடு கூட இருந்தவர்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படுவோம். எங்களோடு இல்லாத மற்றைய லீக்குகளுடனும் ஒரே மாதிரி இணைந்து செயற்படுவோம்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் நியாயமாக நடைபெற்றதா என தக்ஷித்தவிடம் கேட்டபோது,

'பீபா தலையிட்டு எமது வேட்பு மனுக்களை கடைசி நேரத்தில் தேர்தலில் இணைத்தது. லீக்குகள் தங்களது அபிப்பிராயங்களை வாக்களிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளன. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.' என பதிலளித்தார்.

இலங்கை கால்பந்தாட்டம் எதிர்காலத்தில் எப்படியாக இருக்கும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த தக்ஷித்த,

'அதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாட்டில் உள்ள லீக்குகளின் அபிப்பிரயாங்களுக்கு அமையவே கால்பந்தாட்டத்தை கொண்டு நடத்தவேண்டும். மூவேந்தர்கள் குழு எவ்வாறு செயற்படுகின்றது என்பதை சில தினங்களுக்கு பொறுத்திருந்து பார்ப்போம். நானும் என்னோடு இருக்கும் கால்பந்தாட்ட லீக்குளும் கால்பந்தாட்டத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பதில் மாற்றம் இருக்காது. அத்துடன் கால்பந்தாட்ட லீக்குகளில் நாங்கள் 10, 12 வருடங்கள் பணியாற்றிவர்கள். எனவே முன்வைத்த காலை நாங்கள் பின்வைக்கப்போவதில்லை. அதில் மாற்றம் இருக்காது' 

'தேர்தலில் வெற்றிபெறுவதும் தோல்வி அடைவதும் சகஜம். விளையாட்டின் மூலம் நாங்கள் அதனைக் கற்றுக் கொண்டுள்ளோம். ஏனெனில் எமது குழுவில் இடம்பெற்ற அனைவரும் விளையாட்டில் (கால்பந்தாட்டம்) ஈடுபட்டவர்கள். போட்டியில் வெற்றியும் தோல்வியும் இருக்கத்தான் செய்யும். அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம். 

'இந்தத் தேர்தலில் இதனைவிட சிறந்த பதில் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். எனவே தேர்தலில் வெற்றிபெற்ற குழுவினருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். கால்பந்தாட்டத்திற்கு எங்களிடமிருந்து ஒத்துழைப்பு தேவைப்பட்டால் அதனை நிறைவேற்றுவோம். ஆனால், நிர்வாகத்தில் அவர்களுடன் நானோ, எனது குழுவினரோ இணைய மாட்டோம். என்னைப் பொறுத்தமட்டில் அன்று கூறியதுபோல அழுகிய தக்காளியுடன் நான் சேரமாட்டேன்' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மும்பையில் 'ஆசிய Dueball சம்பியன்ஷிப் 2023'...

2023-12-07 15:46:03
news-image

ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை...

2023-12-07 12:14:41
news-image

விக்கெட்டை நோக்கி சென்ற பந்தை கையால்...

2023-12-06 14:47:13
news-image

ஆசிய கிண்ணப்போட்டிகளுக்காக19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட்...

2023-12-06 11:27:18
news-image

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவர் உபுல்தரங்க

2023-12-04 19:55:56
news-image

சென்னை புயல் ; தனது இரண்டாவது...

2023-12-04 15:45:59
news-image

மகளிருக்கான 'மேஜர் கிளப்' 50 ஓவர்...

2023-12-04 15:07:17
news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2023-12-01 16:52:21
news-image

கிரிக்கெட் அரங்கில் வரலாறு படைத்த உகாண்டா...

2023-12-01 15:30:34
news-image

மேஜர் லீக் ரக்பி தொடர் நாளை...

2023-11-30 17:43:19
news-image

'ஸ்ரீ லங்கா யூத் லீக் 2023'...

2023-11-30 13:51:56
news-image

தனுஸ்கவை மற்றுமொரு சட்டத்தின் கீழ் சிக்கவைப்பதற்குஅவுஸ்திரேலிய...

2023-11-29 14:37:50