வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்தோற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் வசந்த மண்டப பூஜைகளை தொடர்ந்து, அங்கிருந்து கற்கோவளத்து அடியவர்கள் வல்லிபுரத்து ஆழ்வாரையும் பரிவார மூர்த்திகளையும், ஆஞ்சநேயர் முன்னே செல்ல, காவிச் சென்றனர்.
அதனையடுத்து, சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இந்து சமுத்திரத்தில் சக்கரத்து ஆழ்வார் என்று அழைக்கப்படும் வல்லிபுரத்து ஆழ்வார் தீர்த்தமாடினார்.
கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வல்லிபுரத்து ஆழ்வார் திருவிழாவின் 16ஆம் நாளாகவும் புரட்டாதி பௌர்ணமி தினமாகவும் அமைந்த நேற்று தீர்த்தோற்சவம் இடம்பெறுவது வழமையாகும்.
இன்றைய வல்லிபுரத்து ஆழ்வார் சமுத்திர தீர்த்த உற்சவத்துக்கு வடமராட்சி, யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சுமார் 2 இலட்சம் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் இத்திருவிழாவில் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.
இலங்கை போக்குவரத்து சபை, வடமராட்சி தனியார் போக்குவரத்து சேவை என்பன அடியவர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்கியிருந்தன.
இதே போன்று பருத்தித்துறை பொலிஸார், இலங்கை முதலுதவி சங்கத்தினர், இந்து சமய தொண்டர் சபை, சாரணர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர், முதலுதவி மற்றும் ஒழுங்குபடுத்தல் சேவைகளை வழங்கினர்.
மேலும் பருத்தித்துறை பிரதேச சபையினர் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.
தாக சாந்தி ஆலய சூழலில் மட்டுமல்ல, வடமராட்சி எங்கும் அடியவர்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.
நேற்றைய தீர்த்தோற்சவத்தின்போது பல அடியார்கள் தூக்கு காவடி, பாற்காவடி, கற்பூர சட்டி போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினர்.
இதனையடுத்து, இன்று (30) கேணித் தீர்த்தத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM