கடந்த பத்தாண்டுகளில் உடல் உறுப்பு மாற்று சத்திர சிகிச்சை என்பது 100 சதவீதம் வெற்றியளிக்கக்கூடிய சத்திர சிகிச்சையாக நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூட்டு, இதயம், கல்லீரல், தோள்பட்டை உள்ளிட்ட பல உடல் உறுப்புகளின் மாற்று சத்திர சிகிச்சைத் தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக, ஸ்டெம்செல் சிகிச்சை வளர்ச்சியடைந்து வரும் நவீன தொழிலநுட்ப சிகிச்சையாகத் திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த சிகிச்சை முறை வியக்கத்தக்க அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது.  

இதன் போது, மனித உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்டெம்செல்களை நவீன தொழில்நுட்பம் மூலம் செலுத்தி, அந்த பகுதியில் திசுவின் வளர்ச்சியை இயற்கையாக ஏற்பட வைத்து நோய் பாதிப்பையும், குறைபாட்டையும் சீராக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்நிலையில் தற்போது எலும்பு மஜ்ஜை, தொப்புள்கொடி, இரத்தம், விழிவெண் படலம், பல், கல்லீரல் ஆகியவற்றின் திசுக்களில் இருந்து எடுத்து, வளர்த்தெடுத்து உற்பத்தி செய்யப்படும் ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் சர்க்கரை நோய், சிறுநீரகநோய், இதயநோய், முகத்தாடை, முதுகெலும்பு, தைரொய்ட் பாதிப்பு உள்ளிட்ட எழுபதிற்கும் மேற்பட்ட நோய்களை வெவ்வேறு சிகிச்சை முறைகள் மூலம் குணமாக்க முடியும். அடுத்த 10 ஆண்டுகளில் உலகெங்கும் ஸ்டெம்செல் மருத்துவ சிகிச்சை தொழில்நுட்பங்களின் ஆளுமை அதிகரிக்கவும், நோயாளிகளிடையே பெரும் வரவேற்பை பெறவும் வாய்ப்புள்ளது.

டொக்டர் குமார மாணிக்கவேல்

தொகுப்பு அனுஷா. 

தகவல் : சென்னை அலுவலகம்