சூரிய நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாவது மொழிக் கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணம், சுதுமலையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
ஹெல்தி லங்கா நிறுவனத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொண்டார்.
அத்தோடு, சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வலி.தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அ.ஜெபநேசன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின.
அதனைத் தொடர்ந்து, விருந்தினர்கள் உரை, மாணவர்களது கலையம்சம் மிகுந்த நிகழ்ச்சிகள், சான்றிதழ்கள் கையளிப்பு போன்றவை இடம்பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM