சிவனொளிப்பாத மலை உச்சிக்கு சென்றுகொண்டிருந்த மூன்று யாத்திரிகள் கடும் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை(10) இரவு போயா தினத்தன்று இடம்பெற்றுள்ளது.

தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 65 வயதுடை சிரியாவதி என்ற பெண்ணும், கம்புறுபிட்டியவைச் சேர்ந்த 64 வயதுடைய சந்திரசேன என்ற நபரும், மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய கித்சிறி பெர்னாண்டோ என்ற நபருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் இதயம் செயலிழந்து குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.