(எம்.ஆர்.எம்.வசீம்)
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு கொண்டுவரப்பட்ட வாழைப்பழத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களை பார்வையிடுவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை 3,15 மணியளவில் வந்த நபர் ஒருவரினால் சந்தேக நபர் ஒருவருக்கு வழங்குவதற்காக கொண்டுவந்திருந்த உணவு பொதி களுத்துறை சிறைச்சாலையில் விருந்தினர்கள் பார்க்கும் இடத்தில் கடமையில் இருந்த அதிகாரிளாவ் சோதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபர் ஒருவருக்கு வழங்குவதற்காக கொண்டுவந்திருந்த வாழைப்பழ சீப்பொன்றில் வாழைப்பழத்துக்குள் 3மற்றும் 4 அங்குல அளவிலான 16 குடிபான பட்டைகளுக்குள் (ஸ்டோ பட்டை) ஹொரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுவந்த நபர் மற்றும் குறித்த பொதுத்பொருள் சட்ட நடவடிக்கைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்துக்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM