பங்களாதேஷுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி : குசலுக்கு தோற்பட்டையில் உபாதை

30 Sep, 2023 | 07:12 AM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக குவஹாட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக சனிக்கிழமை (29) நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீரர் குசல் பெரேரா திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் தொற்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஓய்வு பெற்றார். 

இது பாரதூரமானது அல்லவென தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், அது இலங்கை அணிக்கு சற்று கவலையைத் தோற்றுவித்துள்ளது.

இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றது.

சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் தொடர்ந்து பிரகாசிக்கத் தவறினர்.

பெத்தும் நிஸ்ஸன்கவுடன் ஆரம்ப விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து குசல் பெரேரா 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார்.

தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 40 ஓட்டங்களைப் பகிர்ந்த குசல் மெண்டிஸ் 22 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரம 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த பெத்தும் நிஸ்ஸன்க 68 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

29ஆவது ஓவரில் இலங்கை 3 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், கடைசி 7 விக்கெட்கள் 99 ஓட்டங்களுக்கு சரிந்தன.

மத்திய வரிசையில் தனஞ்சய டி சில்வா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 55 ஓட்டங்களைப் பெற்றார்.

சரித் அசலன்க (18), தசுன் ஷானக்க (3), திமுத் கருணாரட்ன (18), துனித் வெல்லாலகே (10), துஷான் ஹேமன்த  (11), லஹிரு குமார (13 ஆ.இ.) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

பங்களாதேஷ் பந்துவீச்சில் மெஹெதி ஹசன் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 42 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முன்வரிசை வீரர்களான தன்ஸித் ஹசன் (84), லிட்டன் தாஸ் (61), பதில் தலைவர் மெஹிதி ஹசன் மிராஸ் (67 ஆ.இ.) ஆகியோர் பங்களாதேஷின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

லிட்டன் தாஸுடன் ஆரம்ப விக்கெட்டில் 131 ஓட்டங்களையும் மெஹிதி ஹசன் மிராஸுடன் 2ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களையும் தன்ஸித் ஹசன் பகிர்ந்தார்.

இளம் அதிரடி வீரர் தௌஹித் ரிடோய் ஓட்டம் பெறவில்லை.

எனினும் மெஹதி ஹசன் மிராஸ், முஷ்பிக்குர் ரஹிம் (35 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இவ்வாறான பயிற்சிப் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் இடம்பெறும் 15 வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு வழங்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விக்கெட்டை நோக்கி சென்ற பந்தை கையால்...

2023-12-06 14:47:13
news-image

ஆசிய கிண்ணப்போட்டிகளுக்காக19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட்...

2023-12-06 11:27:18
news-image

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவர் உபுல்தரங்க

2023-12-04 19:55:56
news-image

சென்னை புயல் ; தனது இரண்டாவது...

2023-12-04 15:45:59
news-image

மகளிருக்கான 'மேஜர் கிளப்' 50 ஓவர்...

2023-12-04 15:07:17
news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2023-12-01 16:52:21
news-image

கிரிக்கெட் அரங்கில் வரலாறு படைத்த உகாண்டா...

2023-12-01 15:30:34
news-image

மேஜர் லீக் ரக்பி தொடர் நாளை...

2023-11-30 17:43:19
news-image

'ஸ்ரீ லங்கா யூத் லீக் 2023'...

2023-11-30 13:51:56
news-image

தனுஸ்கவை மற்றுமொரு சட்டத்தின் கீழ் சிக்கவைப்பதற்குஅவுஸ்திரேலிய...

2023-11-29 14:37:50
news-image

எங்கள் தந்தை இருதயபரிசோதனை செய்திருந்தால் இன்றும்...

2023-11-28 12:23:12
news-image

வரலாற்றுச் சாதனை புரிந்த பம்பலப்பிட்டி இந்துவின்...

2023-11-28 09:58:58