மழையுடனான வானிலை தொடரும்...

30 Sep, 2023 | 06:56 AM
image

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சப்ரகமுவ, மேல்,தென் மற்றும்  வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி  மற்றும் நுவரேலியா  மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான  ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோ மீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.    

புத்தளம் தொடக்கம் கொழும்பு,காலி, மாத்தறை  ஊடாக  அம்பாந்தோட்டை  வரையான  கடல் பிராந்தியங்களில்  அடிக்கடி  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

புத்தளம் தொடக்கம்  மன்னார்,காங்கேசன்துறை  ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  50 ‐ 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை...

2023-12-07 17:37:22
news-image

ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியுடன்...

2023-12-07 17:57:20
news-image

முல்லை. கரியல் வயல், சுண்டிக்குளம் பிரதேசவாசிகள்...

2023-12-07 17:44:58
news-image

வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எமது வளங்களை...

2023-12-07 16:44:34
news-image

தலவத்துகொட கிம்புலாவல வீதியோர உணவு கடைகளை...

2023-12-07 16:58:52
news-image

சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், பொது மக்கள்...

2023-12-07 16:51:10
news-image

கொடிகாமம் வீதியில் இளைஞரை தாக்கிவிட்டு, வீடு...

2023-12-07 15:36:45
news-image

பொல்கொட ஆற்றில் குதித்து உயிருக்குப் போராடியவர்...

2023-12-07 15:37:57
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-07 15:10:59
news-image

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் விற்பனை...

2023-12-07 15:14:49
news-image

ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை

2023-12-07 14:40:24
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான்...

2023-12-07 14:17:35