வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் பொருத்தப்பட்ட நீர்க் குழாய் வெடித்துள்ளதால் நீர் வீண் விரயமாகுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பேரூந்து நிலைய நேரக்கணிப்பாளரினால் வவுனியா நகரசபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இதுவரையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தேசிய நீர் வழங்கும் சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதும் இது தொடர்பாக நகரசபையே தங்களுக்கு முறைப்பாடு மேற்கொள்ளவேண்டும் என தேசிய நீர் வழங்கும் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து வறட்சியான காலத்தில் இவ்வாறு நீ்ர் வீண் விரையமாவதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.