ஸ்பெயின் வௌவால் குகையில் ஐரோப்பாவின் பழமையான காலணி

29 Sep, 2023 | 02:04 PM
image

சுமார் 6,000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் புல்லால் நெய்யப்பட்ட செருப்புகளான ஐரோப்பாவின் பழமையான காலணிகளை தென்மேற்கு ஸ்பெயின் அண்டலூசியாவில் உள்ள வௌவால் குகையில் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

19 ஆம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட ஸ்பெயினில் உள்ள வௌவால் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலப் பொருட்களில் அவை அடங்கும்.

ஆராய்ச்சியாளர்கள் கூடைகள் மற்றும் கருவிகளின் தொகுப்பையும் ஆய்வு செய்தனர்.

கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் தெற்கு ஐரோப்பாவில் மிகவும் பழமையான மற்றும் சிறந்த பாதுகாக்கப்பட்ட தாவர இழை என ஆய்வின் இணை ஆசிரியர் மரியா ஹெர்ரெரோ ஓட்டல் கூறினார்.

தொழில்நுட்ப பன்முகத்தன்மை மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் சிகிச்சை ஆகியவை வரலாற்றுக்கு முந்தைய சமூகங்களின் திறமையை எடுத்துக்காட்டுகின்றன என்றும் அவர் கூறினார்.

வௌவால் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட 76 பொருட்களின் சேகரிப்பானது சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதும் தொகுப்பில் உள்ள சில பொருட்கள் 9,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும்

பகுப்பாய்வு செய்யப்பட்ட செருப்புகளின் கட்டமைப்பில் பல்வேறு வகையான புல், தோல் மற்றும் சுண்ணாம்பு போன்ற பிற பொருட்களையும் பயன்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி குகையை முதன்முதலில் 1831 ஆம் ஆண்டில் ஒரு நில உரிமையாளர் அணுகினார் அவர் வௌவால் எச்சங்களை சேகரித்து உரம் தயாரிக்கப் பயன்படுத்தி உள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்குள் இது சுரங்கத் தொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் குகையைச் சுரங்கம் செய்யும் போது, பகுதியளவு மம்மி செய்யப்பட்ட சடலங்கள், கூடைகள், மரக் கருவிகள் மற்றும் பிறவற்றில் - காட்டுப்பன்றி பற்கள் மற்றும் ஒரு தனித்துவமான தங்க கிரீடம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கேலரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஜமானர் இறந்தது தெரியாமல் 4 மாதமாக...

2023-11-06 15:00:01
news-image

வெளியரங்கமாகின்றது - TikTok இன் வெற்றி...

2023-11-01 16:34:53
news-image

750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து...

2023-10-25 10:05:28
news-image

சக்தி வாய்ந்த பார்வை!

2023-10-19 17:26:17
news-image

ஸ்பெயின் வௌவால் குகையில் ஐரோப்பாவின் பழமையான...

2023-09-29 14:04:46
news-image

எம்முடைய குடும்பமும் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாகவும்...

2023-09-20 16:41:22
news-image

சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடி திருமணம்

2023-09-14 21:12:17
news-image

நல்லூர் ஆலய மாம்பழ திருவிழாவில் 'குட்டி...

2023-09-11 17:26:24
news-image

குழந்தைகளுக்கு சந்திரயான், லூனா, விக்ரம், பிரக்யான்...

2023-08-28 15:31:00
news-image

பூக்களின் குணங்கள்

2023-08-15 13:02:20
news-image

இலங்கையில் முதன் முறையாக குஞ்சு பொரித்த...

2023-07-26 17:08:50
news-image

தோனிக்கும், தமிழ்மக்களுக்கும் மொழி ஒரு தடை...

2023-07-26 11:37:38