வங்கிச்சேவை மற்றும் காப்புறுதித் தொழிற்துறை மத்தியில் டிஜிட்டல் தொழில்நுட்ப உற்பத்திகளை வழங்கிவருகின்ற Intellect Design Arena Ltd நிறுவனம் Citizens Development Business Finance PLC (CDB) நிறுவனத்திற்கு அதன் நவீன வாடிக்கையாளர்களின் தேவைகளை ஈடுசெய்வதற்கு உதவும் வகையில் Intellect இன் DIGITAL FACE என்ற Omni Channel தீர்வை அமுல்படுத்தியுள்ளமை தொடர்பில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் மூலமாக CDB நிறுவனம் தனது சில்லறை வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் உற்பத்திகளை தற்போது வழங்க முடியும். CDB வாடிக்கையாளர்கள் தற்போது இணையம் மற்றும் மொபைல் மூலமாக இடையறாத Omni channel டிஜிட்டல் அனுபவத்தைப் பெற்று மகிழ முடியும்.

டிஜிட்டல் மாற்றம் என்பது வெறுமனே பாரம்பரிய வங்கிச்சேவையிலிருந்து டிஜிட்டல் உலகிற்குள் காலடியெடுத்து வைப்பது மட்டுமல்ல. மாறாக நீண்ட கால அடிப்படையிலான நற்பயனளிக்கும் ஒரு உறவுமுறையை நிதி நிறுவனங்கள் எவ்வாறு தமது வாடிக்கையாளர்களுடன் கட்டியெழுப்ப முடியும் என்பது தொடர்பானது.

சமீபத்தைய காலத்தில் ‘டிஜட்டல்’ என்ற வார்த்தை தொடர்பான தெசிபல் (decibel) மட்டங்கள் பாரிய வளர்ச்சி கண்டுள்ளன. கணினி வரலாறு ஆரம்பித்த நாட்கள் மற்றும் ‘analog’ இற்கு நேர்மாறாக ‘டிஜிட்டல்’ என்ற தொழில்நுட்பத்தின் உபயோகம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் டிஜிட்டல் என்பது இன்று முழுமையாக புதியதொரு முக்கியத்துவத்தை அடையப்பெற்றுள்ளது.

பிரத்தியேகமான வகைப்படுத்தல் வசதியுடன் ஒரே தடவையிலேயே பல்வேறுபட்ட மார்க்கங்கள் மற்றும் சாதனங்கள் மத்தியில் புதிய உற்பத்திகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு நிதிசார் நிறுவனங்களுக்கு இடமளிக்கின்ற CORA (Configure Once Run Anywhere ஒரு முறை பொருத்திரூபவ் உள்ளிணைத்து எங்கும் செயற்படுத்துதல்) கட்டமைப்பினை உபயோகித்து மார்க்கங்களுக்கு ஒரு தனி குறியீட்டுத் தளத்தைக் கொண்டுள்ள தனியுரிம டிஜிட்டல் முக சாதனமே (proprietary Digital Face Tool Kit), Intellect Digital Face உற்பத்தியாகும்.

“CDB நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றத்திற்கான பயணத்தில் அங்கம் வகிப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்” என்று Intellect Design Arena நிறுவனத்தில் டிஜிட்டல் வங்கிச்சேவைப் பிரிவிற்கான தலைமை அதிகாரியான ராஜேஷ் குப்புசுவாமி குறிப்பிட்டார்.

“CDB போன்ற நிதிசார் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள வளங்களை உச்ச முறையில் பயன்படுத்தி Omni channel டிஜிட்டல் மாற்றத்திற்கு Intellect Digital Face இடமளிக்கின்றது.

சில்லறை வங்கிச்சேவை app பயன்பாடுகளின் மிகச் சிறந்த திறன்கள் மூலமாக முன்னெடுக்கப்படுகின்ற வலுவான வகைப்படுத்தல் மற்றும் தனிப்பயனாக்கத்துடன் தற்போதுள்ள தொழில்நுட்ப வடிவமைப்புடன் மிக இலகுவாக உள்ளிணைத்து வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்குவதில் ஒரு தெளிவான மாற்றத்திற்கான ஏதுவாக Digital Face செயற்படும் என நாம் உச்ச நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

Intellect Design Arena நிறுவனத்தில் வளர்ச்சிகண்டு வருகின்ற சந்தைகளுக்கான தலைமை அதிகாரியான கே. ஸ்ரீநிவாசன் கூறுகையில்,

“CDB நிறுவனத்தில் Digital Face அமுலாக்கம் செய்யப்பட்டுள்ள இத்தருணத்தில் டிஜிட்டல் மாற்றத்திற்கான நிகழ்ச்சிநிரலை சிறப்பாக முன்னெடுத்து தனது வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் புதிய மற்றும் புத்தாக்கம் நிறைந்த இடையறாத OMNI channel வங்கிச்சேவை அனுபவத்தை வழங்குகின்ற ஒரு நிதிசார் நிறுவனமாக CDB செயற்படுவதற்கு இடமளிக்கும் பயணத்தில் அங்கம் வகிப்பதையிட்டு நாம் மிகவும் பூரிப்படைந்துள்ளோம்.

இலங்கையில் எமது தொழிற்பாடுகளை விஸ்தரிப்பதையும் இதன் மூலமாக வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளதையிட்டும் நாம் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்ரூபவ்” என்று குறிப்பிட்டார்.