இலங்கை சுற்றுலாத்துறையின் முதுகெலும்பான தேசிய விமான சேவை - ஒரு நேரடி ரிப்போர்ட்!

Published By: Priyatharshan

29 Sep, 2023 | 05:50 PM
image

வீ.பிரியதர்சன்

இலங்கையில் பெரும் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் சுற்றுலாத்துறையின் முதுகெலும்பாக ஸ்ரீலங்கன் விமான சேவை திகழ்கின்றது.

ஸ்ரீலங்கன் விமான சேவை எவ்வாறு தனது சேவைகளை முன்னெடுக்கின்றது, அங்கு என்னென்ன கட்டமைப்புகள் காணப்படுகின்றன, அவற்றின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் இருநாள் கள விஜயம் அமைந்தது.

ஏவியேசன் ஜேர்னலிசம் வேர்க் ஷொப் (Avitation Journalism workshop) செப்டெம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஊடகவியலாளர்களுக்கான ஒரு செயலமர்வை கட்டுநாயக்கவிலுள்ள ஸ்ரீலங்கா ஏவியேசன் கல்லூரியில் நடத்தியது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் தொடர்பாடல் முகாமையாளர், தீபால் பெரேரா (Manager Corporate Communications of SriLankan Airlines, Deepal Perera )

ஸ்ரீலங்கன் விமான சேவை தனது செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்கின்றது, அங்குள்ள கட்டமைப்புக்கள் எவ்வாறு தொழிற்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும் முகமாகவும் தவறான செய்திகள் மற்றும் தகவல்கள் வெளியாவதைத் தடுக்கும் நோக்கிலும் இது முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் சுற்றுலாத்துறையிலும் நாட்டுக்கு வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் நிறுவனமாகவும் இந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முக்கிய பங்காற்றி வருகின்றது.

இந்நிலையில், கொவிட் தொற்றுடன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஸ்ரீலங்கன் விமான சேவை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அங்கு பணியாற்றும் விமானிகள் உள்ளிட்டவர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. 

இவ்வாறான பின்னணியில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துடன் செயற்படும் ஏனைய கட்டமைப்புக்கள் எவ்வாறு இயங்குகின்றன, இது தொடர்பாக வெளியாகும் செய்திகளில் காணப்படும் உண்மைத்தன்மை என்ன என்பவை இந்த செயலமர்வின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.

ஒரு விமானத்தை இலங்கையில் எவ்வாறு பழுது பார்க்கின்றார்கள், இங்குள்ள பொறியியலாளர்கள் எவ்வாறு அவற்றை பராமரித்து பழுதுபார்க்கின்றனர் என்பவை தொடர்பில் அவர்களுக்கு உள்ள குறை நிறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சார்ட் நட்டால் ( Chief Executive Officer SriLankan Airlines, Richard Nuttall )

ஒரு வருடத்துக்கு 5 மில்லியனுக்கும் அதிகமானோர் ஸ்ரீலங்கன் விமான சேவை ஊடாக விமானத்தில் பயணிக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப குழுக்கள் இங்கு இயங்குகின்றன. 

இங்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இங்கு பயிற்சி பெற்ற பலர் வேறு நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் கடமை புரிகின்றனர். ஸ்ரீலங்கன் விமான சேவை இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாரிய பங்களிப்பை மேற்கொள்கிறது.

கொவிட் காலத்திலும் ஸ்ரீலங்கன் விமான சேவை நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கியது. எரிபொருள் பிரச்சினையே விமான சேவைக்கு பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது.

கடந்த வருடங்களை விடவும் இவ்வருடம் ஆரோக்கியமான வருமானத்தை பெற்றுள்ளது. எதிர்வரும் வருடங்களில் சிறப்பான ஒரு வலையமைப்பை ஸ்ரீலங்கன் விமான சேவை உருவாக்கும். 

ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக நிர்வகிப்பதற்கு 30 வெளிநாட்டு விமானிகள்  தேவைப்படுகின்றனர். எனினும், தற்போது 5 வெளிநாட்டு விமானிகளே பணியில் உள்ளனர்.

வெளிநாட்டு விமானிகளை பணிக்கு அமர்த்துவது குறித்து அனுமதி கோரியிருந்த நிலையில் அதற்கான அனுமதி கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே கிடைத்துள்ளது. 

கொவிட் தொற்றுப் பரவலுக்கு முன்பிருந்தே வெளிநாட்டு விமானிகள் பணியில் இருந்தனர். இது புதிய விடயமல்ல.

தொழில்நுட்ப விமானி கப்டன் ஜெயஸ்க பரணகே (Technical Pilot, Capt. Jayaska Baranage)

ஸ்ரீலங்கன் விமான சேவையில் அனேகமானோர் இந்தியாவின் சென்னைக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கின்றனர். அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பயணிக்கின்றனர் என தொழில்நுட்ப விமானியான கப்டன் ஜெயஸ்க பரணகே கூறினார்.

12 குறுகிய அமைப்பைக் கொண்ட விமானங்கள் (Narrow-body aircraft) தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் 11 பரந்த அமைப்பைக் கொண்ட விமானங்கள் (Wide-body aircraft) தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

கப்டன் தரத்திலான விமானிகள் 143 பேர் தற்போது கடமையில் உள்ளதாகவும் அவர்களில் 25 பேர் பெண் விமானிகள் எனவும் 83 பேர் முதல் தர அதிகாரிகள் (first officer) எனவும் அவர் கூறினார்.

விமானிகளுக்கான பயிற்சிகள் தற்போது இலங்கையிலேயே நடத்தப்படுவதாகவும் அதற்காக இரண்டு simulator உள்ளதாகவும் கூறினார்.

கடந்த 10 -12 மாதங்களில் சுமார் 50 விமானிகள் விலகிச் சென்றுள்ளதாகவும் அவர்களுக்கு வேறு நிறுவனங்களில் சலுகைகள் கிடைக்கப்பெற்றதால் அவர்கள் இங்கிருந்து சென்றுள்ளதாவும் கூறினார்.

ஆனால் நாங்கள் schedule முறையில் விமானிகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளோம். அதனால் எவ்வித சிக்கல்களும் இல்லை. விமானிகள் ஓய்வு பெறும் வயதெல்லையாக 65 வயது காணப்படுகிறது.

ஒரு வருடத்துக்கு சுமார் 72 ஆயிரம் கிலோ கிராம் எரிபொருள் விமான சேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பெரும் செலவாகும்.

மூத்த விமான சேவை நிர்வாகி எவான்ஜலின் லப்பென் (Inflight Instructor, Evangeline Lappen)

கடந்த நாட்களில் cabin crew ஆட்சேர்ப்புக்காக 8 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக மூத்த விமான சேவை நிர்வாகியான எவான்ஜலின் லப்பென் கூறினார்.

தற்போது ஸ்ரீலங்கன் விமான சேவையில் 60 வீதமான பெண் cabin crew ஊழியர்களும் 40 வீதமான ஆண் cabin crew ஊழியர்களும் உள்ளனர்.

விமான பாதுகாப்பு மேலாளர் கப்டன் ஷவன்த பீட்ரிஸ் ( Flight Safety Manager, Capt. Shavantha Pedris)

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குள் 750 பிரிவுகள் காணப்படுகின்றன. இங்கு ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டம் உள்ளதாலும் விபத்துக்கள் குறைவாக காணப்படுவதாலும் பாதுகாப்பான சேவையை வழங்க முடிகின்றது என கப்டன் ஷவன்த பீட்ரிஸ் குறிப்பிட்டார்.

விமானிகள் ஒவ்வொரு வருடமும் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும். ஒரு விமானி சுமார் 12 முதல் 13 வகையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன்  6 மாதங்களுக்கு ஒரு தடவை விமானிகளுக்கான simulator விமானிகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். 

எதிர்வரும் காலங்களில் 5G தொழில்நுட்பம் விமான சேவை தொழில்நுட்பத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிட்டார்.

மனிதவள மேலாண்மை அதிகாரி நிரோசன் ரணவக்க ( Manager People Engagement and HR Support Services, Niroshan Ranawake )

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் 1300 வகையான பதவி நிலைகள் காணப்படுகின்றன. விமான சேவையில் மாத்திரம் 5600 பேர் ஊழியர்களாக உள்ளனர். 37 விமான சேவைகள் உள்ளன. 9 தொழிற்சங்கங்கள் காணப்படுகின்றன என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை அதிகாரி நிரோஷன் ரணவக்க கூறினார்.

இங்கு எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது. ஆனால் இதுவரை இங்கு கடமையாற்றும் ஊழியர்களில் 100 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர், ஜயனி சேனாநாயக்க (Marketing & Business Development Manager, Jayani Senanayake)

30 வருடகால சேவையை SriLankan Aviation College முன்னெடுத்து வருவதாக  சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர், ஜயனி சேனாநாயக்க தெரிவித்தார்.

இங்கு தற்போது 150 சர்வதேச மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இதனை ஒரு ஏவியேஷன் பல்கலைக்கழகமாக மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். 

பிரதான பொறியியலாளர்கள்

பிரதான பொறியியலாளர்கள் விமானம் எப்படி இயக்குவது, விமானத்தை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினர்.

150 பொறியியலார்கள் உள்ளனர். அவர்களில் 5 பெண் பொறியியலாளர்களும் 450 தொழில்நுட்பவியலாளர்களும் காணப்படுகின்றனர். ஒரு மாதத்துக்கு சுமார் 3500 விமான சேவைகள் இடம்பெறுகின்றன. 

இங்கிருந்து வெளியேறிப் போகின்றவர்கள் போகின்றனர். ஆனால் நாங்கள் புதியவர்களை எடுத்து பயிற்சிகளை வழங்குகின்றோம்.

ஆனால் புதியவர்கள் விமானத்தில் இருக்கும் பிரச்சினைகளை தேடிக் கண்டறிய நேரம் எடுக்கின்றனர். ஏனெனில், அவர்களுக்கு அனுபவம் காணாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படைக்குள் உருவாகும் குழப்பம்

2023-12-10 22:59:03
news-image

பிரித்தானியாவின் பதில் என்ன?

2023-12-10 23:00:23
news-image

கடைசி மூச்சை இழுத்து கொண்­டி­ருக்­கி­றது இஸ்ரேல்

2023-12-10 23:17:37
news-image

ஒல்­லாந்தில் இஸ்­லா­மிய வெறுப்­பா­ளரின் தேர்தல் வெற்றி:...

2023-12-10 23:19:27
news-image

அதிர்வுகளை ஏற்படுத்தப்போகும் தலைமைத்துவ போட்டி

2023-12-10 23:19:47
news-image

ஹென்றி கீசிங்கரும் வரலாற்றில் அவரின் வகிபாகமும்

2023-12-10 23:07:09
news-image

அரசியல்வாதிகளின் கடின பணியும் சுற்றியுள்ள கூட்டத்தின்...

2023-12-10 23:06:56
news-image

மறந்து போனதா பாடங்கள்?

2023-12-10 23:05:12
news-image

தாயகம் திரும்பியோர் மீண்டும் இலங்கைக்கு வருவது...

2023-12-10 23:05:24
news-image

பூகோள தட்ப வெபப அரசியல்

2023-12-10 18:41:05
news-image

துபாய் காலநிலை மாற்ற மாநாடு உலகின்...

2023-12-10 18:38:25
news-image

வரி செலுத்­துவோர் அடை­யாள எண்

2023-12-10 18:38:50