(நெவில் அன்தனி)
சீனாவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான வண்ணத்துப்பூச்சி வகை (பட்டர்ஃப்ளை) நீச்சல் போட்டியில் இலங்கையின் மெத்யூ அபேசிங்க தேசிய சாதனை நிலைநாட்டினார்.
ஹங்ஸோ ஒலிம்பிக் நீர்நிலை விளையாட்டுத் தொகுதி தடாகத்தில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சி வகை நீச்சலின் 5ஆவது தகுதிகாண் போட்டியை 24.58 செக்கன்களில் நிறைவு செய்வதன் மூலம் மெத்யூ அபேசிங்க தேசிய சாதனையை நிலைநாட்டினார்.
எனினும் அந்த தகுதிகாண் போட்டியில் மெத்யூ அபேசிங்க 6ஆவது இடத்தைப் பெற்றதுடன் 40 நீச்சல் வீரர்கள் பங்குபற்றிய 5 தகுதிகாண் போட்டிகளிலும் ஒட்டுமொத்த நிலையில் 13ஆம் இடத்தைப் பெற்றார்.
இதேவேளை, 3 ஆவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய மற்றொரு இலங்கையரான திமுத் அக்கலன்க பீரிஸ் (24.91 செக்) 7ஆவது இடத்தைப் பெற்றார். ஒட்டுமொத்த நிலையில் அவரது நேரப் பெறுதி 22ஆவது இடத்தைப் பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM