பிரித்தானிய பிரஜையான தமிழர் ஒருவர் தரகரின் கட்டணத்தை தன்வசமாக்கியதை ஒப்புக்கொண்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட 43 வயது நபர், இங்கிலாந்தில் உள்ள வசதியான புறநகர்ப் பகுதியான ஹேஸ் வாக், சட்டன் குற்றப்புலனாய்வுப் பிரிவின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அளித்த வாக்குமூலத்தில், 2010இல் 131 மில்லியன் ரூபாயின் பெரும்பகுதியை தவறாக பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
195 மில்லியன் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் கடந்த செப்டெம்பர் 13ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குக் குறிப்பு 8919/2018இன் மேலதிக விசாரணை நடைபெற்றது.
குற்றப்புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த ‘பி’ அறிக்கையில், குறித்த நபரிடமிருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின்படி, தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான நிலம் மற்றுமொரு தனியார் நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டது என்றும் இதற்கு தரகராக நபரொருவர் செயற்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
காணி விற்பனையின் பின்னர், 131,718,000 ரூபாய் தரகர் கட்டணமாக ஒதுக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி மட்டுமே செலுத்தப்பட்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்தார்.
மீதமுள்ள பணம் பிரித்தானிய பிரஜையான தமிழருடையது என நம்பப்படும் இங்கிலாந்தில் உள்ள தேசிய அளவிலான வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணையை தொடர நீதிவான் நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார். அதேநேரம் பிரித்தானிய பிரஜை மீதான பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டதோடு அடுத்த நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை 10 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப்பிணை அடிப்படையிலும் 10 மில்லியன் ரூபாய் சொத்து பிணை ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2004இல் கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் 219.5 பேர்ச்சஸ் காணி கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான முறைப்பாடு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனத்தின் பத்து பங்குதாரர்கள் 1.3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை முதலீடு செய்திருந்தனர். இலங்கையில் முழுமையாக சொந்தமான, பதிவு செய்யப்பட்ட துணை நிறுவனமான தனியார் நிறுவனத்தின் மூலம் காணியை கொள்வனவு செய்தல். இந்த நிலம் பின்னர் ஜூலை 2010இல் விற்கப்பட்டது.
இந்நிலையில், 790 மில்லியன் ரூபாய்க்கு காணி விற்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிலத்தை விற்றதன் மூலம் பெறப்பட்ட பணத்தில் 595,507,721 ரூபாய் மட்டுமே இங்கிலாந்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 194,800,279 ரூபாய் மோசடியாக பெறப்பட்டதாகவும், அந்தத் தொகை குற்றவியல் விதிமீறலில் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM