நரகத்தின் கதவுகள் திறந்தது போல அந்த நிமிடம் காணப்பட்டது என ஈராக்கில் திருமணநிகழ்வில் ஏற்பட்ட பாரிய தீ விபத்திலிருந்து உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்குஈராக்கில் கராகோஸ் நகரில் திருமண நிகழ்வில் இடம்பெற்ற தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்
தீபரவியவேளை காணப்பட்ட நிலையை உயிர் தப்பியவர்கள் பிபிசிக்கு வர்ணித்துள்ளனர்.
செவ்வாய்கிழமை தீ விபத்து இடம்பெற்றவேளை 19 வயது காலி ஹாசிம் ஹைதம் விருந்து மண்டபத்திலிருந்து சில மீற்றர் தொலைவிலேயே நின்றிருந்தார்.
அவர் உள்ளே சிக்குண்டிருந்த தனது ஐந்து நண்பர்களை காப்பாற்ற ஒடினார்.
ஒரு அறை மூடப்பட்டிருந்த நாங்கள் அதனை உடைத்து திறந்தோம் மண்டபத்திலிருந்து பெரும் தீச்சுவாலைகள் வந்தன அது நரகத்தின் கதவுகள் திறந்தது போல காணப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
வெப்பம் தாங்கமுடியாததாக காணப்பட்டது – அதனை என்னால் வர்ணிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மணமக்கள் நடனமாட ஆரம்பித்தவேளை பரவியதீ காரணமாக 94 பேர் உயிரிழந்துள்ளனர்-100 பேர் காயமடைந்துள்ளனர்.
மணமக்கள் உயிரிழந்துள்ளனர் என ஆரம்ப கட்டதகவல்கள் தெரிவித்த போதிலும் அவர்கள் உயிர் பிழைத்துள்ளனர் என சிவில் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
அங்கு தான் பார்த்த காட்சிகளை பெரும்துன்பகரமானவை என நசிம் தெரிவித்துள்ளார்.
என்னால் எதையும் செய்ய முடியவில்லை நான் அங்கிருந்து தப்பியோடினேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு வீரர்கள் வந்ததும் நான் எனது நண்பர்களை பார்ப்பதற்காக உள்ளே ஓடினேன் கழிவறையில் 26 உடல்களை பார்த்தேன் 12 வயது சிறுமி முற்றாக எரியுண்ட நிலையில் மூலையில் காணப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் அந்த நகரில் அந்த மண்டபத்திற்குள் பட்டாசுகள் கொழுத்தப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது என சிவில் பாதுகாப்பு படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தப்பிச்செல்வதற்கான வழிகள் இன்மையும் உயிரிழப்பிற்கு காரணம் என நசீம் தெரிவித்துள்ளார்.
ஒரு சில நிமிடங்களில் அழிந்தது
தனது நண்பர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என நசீம் தெரிவித்துள்ளார்.
அவரின் நண்பர்களில் ஒருவரான 17 டொமி தீ பரவ ஆரம்பித்தவேளை வெளியேறும் பகுதிக்கு அருகில் காணப்பட்டார் இதனால் அவர் உயிர்தப்பினார்.
கூரையிலிருந்து பாரிய கரும்புகையை கண்டேன் இதனால் நான் உடனடியாக வெளியே ஒடினேன் என அவர் குறி;ப்பிட்டார்.
ஐந்து நிமிடங்களில் கட்டிடம் முழுமையாக எறிந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
பல உடல்களை கடந்த இரண்டுநாட்களில் அடக்கம் செய்துவிட்டனர்- எனினும் இன்னமும் பலர் தங்கள் உறவுகளின் உடல்களை தேடிவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM