54ஆவது வருடாந்த செய்ன்ட்ஸ் குவாட்ரங்யூலர் விளையாட்டுப் போட்டி வெள்ளியன்று ஆரம்பம்

29 Sep, 2023 | 10:26 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகளான புனித அந்தோனியார் கல்லூரி (கட்டுகஸ்தோட்டை), புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி (கொட்டாஞ்சேனை), புனித சூசையப்பர் கல்லூரி (மருதானை), புனித பேதுருவானவர் கல்லூரி (பம்பலப்பிட்டி) ஆகியவற்றின் பழைய மாணவர்களுக்கு இடையிலான 54ஆவது செய்ன்ட்ஸ் குவாட்ரெங்யூலர் வருடாந்த விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை (29) காலை ஆரம்பமாகவுள்ளது.

கிரிக்கெட், றக்பி, கூடைப்பந்தாட்டம் ஆகிய மூன்று விளையாட்டுக்களைக் கொண்ட இந்த வருட செய்ன்ட்ஸ் குவாட்ரெங்யூலர் (Saints Quadrangular) விளையாட்டுப் போட்டியை ஓல்ட் பெனடிக்டைன்ஸ் விளையாட்டுக் கழகம் முன்னின்று நடத்துகின்றது.

செய்ன்ட்ஸ் குவாட்ரெங்யூலர் ஆரம்ப விழா வைபவம் புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (29) காலை 7.30 அணிக்கு நடைபெறவுள்ளது.

புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் கலாநிதி புபுது தசநாயக்க தலைமையில் ஆரம்ப விழா நடைபெறும்.

இரண்டு தினங்கள் நடைபெறவுள்ள 54ஆவது செய்ன்ட்ஸ் குவாட்ரெங்யூலர் விளையாட்டுப் போட்டியில் 40 வயதுக்குட்பட்ட பழைய மாணவர்களுக்கு இடையிலான பிரதான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி புனித சூசையப்பர் கல்லூரி, புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி மைதானங்களில் செப்டெம்பர் 29, 30ஆம் திகதிகளில் நடைபெறும்.

முதல் நாளன்று அரை இறுதிப் போட்டிகளும் இரண்டாம் நாள் இறுதிப் போட்டியும் நடைபெறும்.

கல்லூரியிலிருந்து விலகிய பின்னர் ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்தவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவர்.

இப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு கிண்ணமும் வழங்கப்படும். அத்துடன் தொடர் நாயகன், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த களத்தடுப்பாளர் ஆகிய விருதுகளும் வழங்கப்படும்.

40 வயதுக்கு மேற்பட்ட பழைய மாணவர்களுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனித பேதுருவானவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். ஒவ்வொரு அணியிலும் 50 வயதுக்கு மேற்பட்ட இருவர் இடம்பெறுவது கட்டாயமாகும்.

இப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு பிரேமநாத் மொராயஸ் ஞாபகார்த்த கிண்ணமும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு கிண்ணமும் வழங்கப்படுவதுடன் தொடர்நாயகன், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த களத்தடுப்பாளர் ஆகிய விருதுகளும் வழங்கப்படும்.

புனித பேதுருவானவர் றக்பி மைதானத்தில் பழைய மாணவர்களுக்கு இடையிலான அணிக்கு எழுவர் கொண்ட றக்பி போட்டி, லீக் முறையில் செப்டெம்பர் 29ஆம் திகதி காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிக்கு இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறும்.

றக்பியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு கிண்ணமும் தொடர்நாயகனுக்கான விருதும் வழங்கப்படும்.

பழைய மாணவர்களுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி லீக் முறையில் புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அரங்கில் செப்டெம்பர் 29, 30ஆம் திகதிகளில் நடைபெறும்.

இப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு அருட்தந்தை ஜோ ஈ. விக்ரமசிங்க வெற்றிக் கிண்ணம் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு கிண்ணமும் வழங்கப்படும்.

அத்துடன் மிகவும் பெறுமதிவாய்ந்த வீரர், சிறந்த தடுத்தாடும் வீரர், சிறந்த எதிர்த்தாடும் வீரர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

இந்த நான்கு போட்டிகளிலும் மொத்தமாக 255 பழைய மாணவர்கள் விளையாடவுள்ளனர்.

செய்ன்ட்ஸ் குவாட்ரங்யூலர் விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு வைபவத்துடன் முடிவு விழா செப்டெம்பர் 30ஆம் திகதி பிற்பகல் 5.00 மணியளவில் புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி மைதானத்தில் அல்லது ஓல்ட் பென்ஸ் கழக கேட்போர்கூடத்தில் நடைபெறும்.

செய்ன்ட்ஸ் குவாட்ரங்யூலர் விளையாட்டுப் போட்டி தொடர்ச்சியாக நடைபெறுவதில் பிரதான பங்களிப்பு வழங்கிய புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் அமரர் ரஞ்சித் சமரசேகரவை கௌரவிக்கும் வகையில் நான்கு விளையாட்டுப் போட்டி முடிவுகளின் அடிப்படையில் ஒட்டு மொத்த சம்பியனாகும் கல்லூரிக்கு அவரது பெயரிலான ஞாபகார்த்த கிண்ணம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த சம்பியனுக்கான கிண்ணம் 2017இல் வழங்கப்பட்டதிலிருந்து புனித பேதுருவானவர் பழைய மாணவர் விளையாட்டுக் கழகம் தொடர்ச்சியாக 3 தடவைகள் ஒட்டுமொத்த சம்பியனாகியுள்ளது.

கொவிட் - 19 காரணமாக இரண்டு வருடங்கள் போட்டி இடம்பெறவில்லை.

புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் பழைய மாணவரும் கட்டட கலைஞருமான ரஞ்சன் நடேசபிள்ளை பிரதம விருந்தினராகவும் மற்றுமிரு பழைய மாணவர்களான தாமோதரன் சந்த்ரசிறி, ஜோர்ஜ் பேர்னார்ட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளிலும் செய்ன்ட்ஸ் குவாட்ரெங்யூலர் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மும்பையில் 'ஆசிய Dueball சம்பியன்ஷிப் 2023'...

2023-12-07 15:46:03
news-image

ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை...

2023-12-07 12:14:41
news-image

விக்கெட்டை நோக்கி சென்ற பந்தை கையால்...

2023-12-06 14:47:13
news-image

ஆசிய கிண்ணப்போட்டிகளுக்காக19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட்...

2023-12-06 11:27:18
news-image

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவர் உபுல்தரங்க

2023-12-04 19:55:56
news-image

சென்னை புயல் ; தனது இரண்டாவது...

2023-12-04 15:45:59
news-image

மகளிருக்கான 'மேஜர் கிளப்' 50 ஓவர்...

2023-12-04 15:07:17
news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2023-12-01 16:52:21
news-image

கிரிக்கெட் அரங்கில் வரலாறு படைத்த உகாண்டா...

2023-12-01 15:30:34
news-image

மேஜர் லீக் ரக்பி தொடர் நாளை...

2023-11-30 17:43:19
news-image

'ஸ்ரீ லங்கா யூத் லீக் 2023'...

2023-11-30 13:51:56
news-image

தனுஸ்கவை மற்றுமொரு சட்டத்தின் கீழ் சிக்கவைப்பதற்குஅவுஸ்திரேலிய...

2023-11-29 14:37:50