செப்டெம்பரில் பணவீக்கம் 1.3 சதவீதமாக வீழ்ச்சி

Published By: Digital Desk 3

28 Sep, 2023 | 04:45 PM
image

(நா.தனுஜா)

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஒகஸ்ட் மாதம் 4 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், செப்டெம்பர் மாதம் 1.3 சதவீதமாக கணிசமானளவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 4.8 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் செப்டெம்பரில் 5.2 சதவீதமாகவும், ஒகஸ்ட்டில் 8.7 சதவீதமாகப் பதிவான உணவல்லாப் பணவீக்கம் செப்டெம்பர் மாதம் 4.7 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம் செப்டெம்பர் மாதத்தில் 0.88 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு உணவுப்பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட 0.18 சதவீத அதிகரிப்பும், உணவல்லாப்பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட 0.70 சதவீத அதிகரிப்பும் காரணமாக அமைந்துள்ளன.

அதேவேளை, பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் பதிவான 4.6 சதவீதத்திலிருந்து செப்டெம்பரில் 1.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

வலுவான எதிர்பார்க்கைகள் மற்றும் பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மூலம் பணவீக்கமானது நடுத்தர காலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டத்தை எட்டி, ஸ்திரநிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்...

2024-06-12 20:37:33
news-image

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த...

2024-06-12 20:33:05
news-image

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியை...

2024-06-12 20:19:01
news-image

கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

2024-06-12 20:14:05
news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813...

2024-06-12 20:13:13
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

களுத்துறையில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட கோடாவுடன் ஒருவர்...

2024-06-12 20:28:55
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49