சிறிய விற்பனை நிலையத்தை நடத்தி வரும் பலரும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கடனாக பொருட்களை கொடுத்து உதவுவர். இது ஒரு வகையினதான வணிக உத்தி என்றாலும்.
கடன் அளவு அதிகரித்தால்.. இதனால் வாடிக்கையாளர்களுடனான உறவு கெட்டுவிடும். அது நடைபெற கூடாது என்பதற்காக அவர்களிடத்தில் கடனை அடைக்குமாறு கேட்டுக் கொள்வதுண்டு.
சிலர் இதன் காரணமாக அவர்களுக்கு வரவேண்டிய பணம் முடங்கிவிடும். நாளாந்தம் ஆயிரம் கணக்கில் வந்து கொண்டிருந்த பண வரவு திடீரென முடங்கிவிடும்.
வேறு சிலருக்கு வரவேண்டிய இடத்திலிருந்தோ அல்லது கிடைக்க வேண்டிய இடத்திலிருந்தோ பண வரவு கிடைக்காமல் முடக்கம் ஆகிவிடும். இத்தகைய பண முடக்கத்தை நீக்கி பண வரவை அதிகரிக்க எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் முடிச்சு பரிகாரம் என்றதொரு எளிய பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.
முடிச்சு பரிகாரம் என்றவுடன் எம்மில் சிலர் வியப்படைய கூடும். கடந்த தசாப்தங்களில் எம்முடைய வீட்டில் இருக்கும் பெண்மணிகள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக.. அணிந்திருக்கும் தங்களுடைய சேலையின் நுனியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஒரு முடிச்சு போட்டுக் கொள்வர். வேறு சிலர் மஞ்சள் வண்ண துணியை கொண்டு அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து முடிச்சு போட்டு பூஜை அறையில் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என வணங்கி வைத்துவிடுவர். எனவே முடிச்சு பரிகாரம் என்பது எம்முடைய முன்னோர்கள் வழிவழியாக கடைப்பிடித்து வரும் எளிய பரிகாரம் தான்.
எம்முடைய பண முடக்கத்தை நீக்கி பண வரவு அதிகரிக்க தங்க வண்ணத்திலான ரிப்பன் அல்லது பச்சை அல்லது வெள்ளை வண்ணத்திலான ரிப்பன்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ரிப்பன் ஒரு மீற்றர் அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ரிப்பனை வெள்ளிக்கிழமை இரவு வேளையில் வரும் அதாவது இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை இருக்கும் சுக்கிர ஹோரையில் உங்களது பூஜை அறையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ ஆகியவற்றுடன் இந்த ரிப்பனையும் வைத்து மனதார வணங்குங்கள். யாரிடமிருந்து உங்களது தொகை வசூலாக வேண்டுமோ அவர்கள் உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என நினைத்து.. பிரார்த்தித்து.. பூஜையில் வைத்திருக்கும் அந்த ரிப்பனை எடுத்து வரிசையாக ஒன்பது முடிச்சினை இடுங்கள். ஒன்பது முடிச்சிட்ட ரிப்பனை இரவு படுக்கையில் உறங்கும் முன் உங்களது தலையணையின் கீழ் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்பது நாட்களுக்குப் பிறகு உங்களது கோரிக்கை இந்த பிரபஞ்சத்திடம் சமர்ப்பித்த பிறகு, ஒன்பது முடிச்சிட்ட அந்த ரிப்பனை அப்புறப்படுத்தி விடுங்கள். அதனை துண்டு துண்டாக வெட்டியோ அல்லது ஓடும் நீரிலோ விட்டு விடுங்கள். இந்த பரிகாரம் நிறைவு செய்த பிறகு 14 நாட்களுக்குள் உங்களுடைய பண முடக்கம் நீங்கி, பணவரவு அதிகரிப்பதை அனுபவத்தில் காண்பீர்கள்.
வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை சுக்கிர ஹோரையில் இதனை செய்ய இயலாதவர்கள்.. வியாழக்கிழமை மாலையில் வரும் குரு ஹோரையிலும் இதனை செய்யலாம். இதன் போதும் பண முடக்கம் நீங்கி பணவரவு அதிகரிப்பதை காண்பீர்கள்.
இந்த எளிய முடிச்சு பரிகாரத்தை ஆன்மீக பெரியோர்கள் முன்மொழிந்த வழிமுறையில் பின்பற்றி, உங்களது பண முடக்கத்தை நீக்கி பண வரவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
தகவல் :பாக்கியா
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM