உலகத்தில் ஆண்களை விட பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவு என்ற கருத்தியல் கடந்த தசாப்தங்களில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது மாற்றி அமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறைகளால் பெண்களுக்கும், ஆண்களுக்கு நிகராக மாரடைப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட இதய பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இதயம் தொடர்பான பாதிப்புகளை சாதாரண உடல் நலக் கோளாறு என அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். இதனால் இதய ஆரோக்கியம் தொடர்பாக பெண்களும், பெண்மணிகளும் கூடுதல் முன்னுரிமை அளித்து அதற்கான முறையான விழிப்புணர்வை பெற வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
ஆண்களை விட பெண்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்பு வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம். பெண் பிள்ளைகள் பிறந்தது முதல் 12 வயது வரை ஒரு வகையினதான இதய ஆரோக்கியமும், அவர்கள் பூப்பெய்திய பிறகு ஹோர்மோன்களின் சமச்சீரற்ற சுரப்பின் காரணமாக இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் திருமணத்திற்கு பிறகு கருவுற்றிருக்கும் காலத்திலும் மன அழுத்தம் மற்றும் ஹோர்மோன் சுரப்பிகளின் சமச் சீரற்ற தன்மையின் காரணமாக இதய பாதிப்பிற்கு ஆளாகக்கூடும். பிறகு அவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகும் ஹோர்மோன் சுரப்பிகளின் பற்றாக்குறை தன்மை காரணமாக இதய பாதிப்பிற்கு ஆளாக கூடும். எனவே பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இதயம் தொடர்பான பாதிப்புகளை துல்லியமாக அவதானித்து, ஆண்களைப் போலவே குறுகிய கால அவகாசத்திற்குள் மருத்துவரை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.
தற்போதுள்ள சூழலில் பெண்களுக்கும், பெண்மணிகளுக்கும் முதுமையின் காரணமாக ஆண்களை விட எளிதில் இதய தசைகளின் தளர்வு, இதய ரத்த நாளங்களின் தளர்வு.. போன்ற பாதிப்பு ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. இதனால் அவர்கள் இது தொடர்பான முறையான விழிப்புணர்வை முழுமையாக பெற்று, மருத்துவர்களை சந்தித்து இதய பாதிப்புகள் தொடர்பான சிகிச்சைகளைப் பெற்று, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
டொக்டர் மகாதேவன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM