நடிகர் மதுர் மிட்டல் நடிக்கும் '800' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

28 Sep, 2023 | 02:30 PM
image

எம் மண்ணின் மைந்தரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி தயாராகி இருக்கும் '800' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் எம். எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் '800'. இதில் மதுர் மிட்டல், மகிமா நம்பியார், அருள் தாஸ், நரேன், நாசர், ரித்விகா, யோக் ஜேபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இலங்கையின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் சுயசரிதையை தழுவி மோட்டிவேஷனல் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதியன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்