தளபதி விஜயின் 'லியோ' படத்திலிருந்து அடுத்த பாடலின் காட்சித் துணுக்கு வெளியீடு

28 Sep, 2023 | 12:33 PM
image

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் 'லியோ' எனும் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலான 'படாஸ்..' எனத் தொடங்கும் பாடலின் பிரத்யேக காட்சி துணுக்கு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் இன்று மாலை ஆறு மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'லியோ'. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித் குமார் தயாரித்திருக்கிறார். ஜெகதீஷ் பழனிச்சாமி இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் 'படாஸ்..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகிறது. இப்பாடலுக்கான பிரத்யேக காட்சி துணுக்கு இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால் உற்சாகமடைந்த தளபதி விஜயின் ரசிகர்கள் இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்