கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி; தொடர் இந்தியா வசம்

28 Sep, 2023 | 12:09 PM
image

(நெவில் அன்தனி)

ராஜ்கொட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (27) நடைபெற்ற கிரிக்கெட் போட்டிவுக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 66 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியது.

உலகக் கிண்ணப் போட்டி அண்மித்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

முன்வரிசை வீரர்களான டேவிட் வோர்னர், மிச்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், க்ளென் மெக்ஸ்வெலின் 4 விக்கெட் குவியல் என்பன அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

இந்திய அணியில் மீண்டும் இணைந்த வழமையான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, முன்னாள் தலைவர் விராத் கோஹ்லி ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்கள் பலனற்றுப் போயின.

கடைசிப் போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 2 - 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 352 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் மிச்செல் மார்ஷ் 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 96 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களையும் குவித்ததுடன் முதலாவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து மிச்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் (74) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 137 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு மேலும் பலம் சேர்த்தனர்.

அவர்களை விட மானுஸ்  லபுஷேன்  72 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 81 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

353 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ரோஹித் ஷர்மா 6 சிக்ஸ்கள், 5 பவுண்டறிகளுடன் 81 ஓட்டங்களையும் விராத் கோஹ்லி 56 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 48 ஓட்டங்களையும் ரவிந்த்ர ஜடேஜா 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆரம்ப விக்கெட்டில் வொஷிங்டன் சுந்தருடன் 74 ஓட்டங்களையும் 2ஆவது விக்கெட்டில் விராத் கோஹ்லியுடன் 72 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா பகிர்ந்தார். ஆனால் அதன் பின்னர் சிறந்த இணைப்பாட்டங்கள் ஏற்படுத்தப்படாதது இந்தியாவின் தோல்விக்கு காரணமாயிற்று.

பந்துவீச்சில் க்ளென் மெக்ஸ்வெல் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: க்ளென் மெக்ஸ்வெல், தொடரநாயகன்: ஷுப்மான் கில்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12