(எஸ் .ஆர்)
கட்டாரில் இருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 11 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்கு கடத்தி வந்த விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குறித்த சந்தேக நபர் கட்டாரில் டெக்சி சாரதியாக செயற்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது.
குறித்த நபர் இன்று அதிகாலை 03.07 மணியளவில் டோஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-658 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் அடங்கிய 57 சிகரெட் கார்ட்டுன்களை அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளது சோதனையின் பொது அவை மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த சிகரெட்டுக்கள் 11 இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பெறுமதியானவை என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் இன்று (27) பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM