தாயினால் கைவிடப்பட்டு சென்ற 2 வயது சிறுவனின் உயிரை, கடும் பனிப்பொழிவு நிறைந்த குளிரிலிருந்து, நாயொன்று இரண்டு நாட்களாக காப்பாற்றிய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் ஹலடாய் பகுதியில் உள்ள கிராமத்தில், தயொருவர் தனது இரண்டு வயது மகனை கடும் பனிப்பொழிவு மிகுந்த காலநிலையில், உணவேதும் இல்லாதவாறு விட்டுச் சென்றுள்ளார்.

குளிர் காக்கும் உடைகள் எதுவும் அணியப்படாத சிறுவன், குளிரில் கடுமையாக பாதிக்கப்பட்டவே, சேவியர் என்ற பெயருடைய நாய், குறித்த சிறுவனை தனது உடல் வெப்பத்தால், இரண்டு நாட்கள் பாதுகாத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இந்நிலையில் அயலவர்கள், சிறுவன் உணவில்லாமல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்து சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர். 

குறித்த சிறுவனின் தாய், நான்கு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த நிலையில், பொலிஸார் குழந்தையை பராமரிக்காத குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.