(எஸ்.ஆர்)
அதி தீவிர மந்த போஷணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகளவில் காணப்படும் மாவட்டமாக கம்பஹா மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் கம்பஹா மாவட்டத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட 1439 சிறுவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 320 சிறுவர்கள் மந்த போசணையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் கொழும்பின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் மந்த போசணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பிரதேச சுகாதார பிரிவு காரியாலயம் வழங்கும் நிவாரண திட்டங்களுக்கு பெற்றோர்கள் அழைத்து வருவதில்லை எனவும் போக்குவரத்து செலவீனங்களே இதற்கு காரணம் எனவும் கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போக்குவரத்து செலவீனங்களை வழங்க செஞ்சிலுவை சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM