பெண்களுக்கு ஏற்படும் பிரத்தியேக சிறுநீர் கசிவு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

27 Sep, 2023 | 03:30 PM
image

முப்பத்து மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாகவும், இதில் 85 சதவீதம் பெண்மணிகள் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

மேலும் பெண்மணிகள் பிரசவத்திற்குப் பிறகு அவர்களுடைய பெல்விக் எனப்படும் இடுப்பு பகுதியில் ஏற்படும் தளர்வு காரணமாக இத்தகைய சிறுநீர் கசிவு பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்கு தற்போது ஸ்கல்ப்ட்டிங் தெரபி எனும் நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிறுநீர் கசிவு என்பது ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கும் பாதிப்பாகும். குறிப்பாக பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்த பாதிப்பு இருந்தாலும்... அவர்களுக்கு சிறுநீர் கசிவு என்பது ஏற்படக்கூடும்.

எம்மில் பலரும் சிறுநீர் கசிவு என்பது சிறுநீர் வெளியேற்றம் என நினைக்கிறார்கள். அதாவது சிறுநீர் கசிவு என்பது திடீரென்று ஏற்படும் பாதிப்பின் காரணமாக உண்டாகும் சில துளி சிறுநீர் கசிவாகும்.

சில பெண்மணிகள் சிறுநீரை வெளியேற்ற கழிவறை செல்வதற்குள் அவர்களுக்கு சில துளிகள் சிறுநீர் கசிவு பாதிப்பு ஏற்படும். இதற்கு தற்போது ஸ்கல்ப்டிங் தெரபி எனப்படும் நவீன சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருகிறது.

இத்தகைய சிகிச்சையின் போது பிரத்தியேக கருவிகளை எம்முடைய உடம்பில் பொருத்துவார்கள். இந்த கருவியிலிருந்து வெளியாகும் பிரத்யேக லேசர் ஒளிக்கற்றைகள் இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை வலிமைப்படுத்தி அதன் இயங்குத்திறனை சீரமைக்கிறது.

இத்தகைய சிகிச்சை சில பெண்மணிகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை 30 நிமிடம் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் நாம் நினைக்கும் தருணத்தில் தான் சிறுநீரை வெளியேற்ற இயலும். மேலும் இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது குறித்து மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் சமிங்ஞைகளும் துல்லியமாகவும், இயல்பாகவும் செயல்பட தொடங்கும். இதனால் திடீரென்று சிறுநீர் கசிவு பாதிப்பு ஏற்படுவது என்பது நிகழாமல் தடுக்கப்படுகிறது.

டொக்டர் வேணி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right