bestweb

நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

27 Sep, 2023 | 02:40 PM
image

நடிகர் ஆதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'சப்தம்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சப்தம்'. இதில் ஆதி, சிம்ரன், லட்சுமி மேனன், லைலா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல்பா ஃபிரேம்ஸ் மற்றும் செவன் ஜி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.‌

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது தொடங்கி இருக்கிறது. விரைவில் இப்படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஹாரர் திரில்லர் திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான அறிவழகன் சொந்தமாக தயாரித்து இப்படத்தை இயக்குவதாலும், சிம்ரன், லைலா உள்ளிட்ட மூத்த நடிகைகள் நடித்திருப்பதாலும், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன்...

2025-07-17 20:11:33
news-image

கவனம் ஈர்க்கும் நடிகர் பரத்தின் 'காளிதாஸ்...

2025-07-17 17:26:41
news-image

நடிகர் எம். எஸ். பாஸ்கர் கதையின்...

2025-07-17 17:27:32
news-image

சாதனை படைக்கும் வடிவேலு - பகத்...

2025-07-17 17:27:01
news-image

நடிகர் ஜீவா நடிக்கும் புதிய படத்தின்...

2025-07-17 17:27:17
news-image

நடிகர் விஜயை முன்னிறுத்தும் 'யாதும் அறியான்...

2025-07-16 01:39:43
news-image

அறிமுக நடிகர் நாகரத்தினம் நடிக்கும் 'வள்ளி...

2025-07-16 01:35:45
news-image

நடிகர் டீஜே அருணாசலம் நடிக்கும் 'உசுரே...

2025-07-16 01:30:48
news-image

விவாகரத்து விடயங்களை உரக்க பேசும் 'தலைவன்...

2025-07-15 21:58:20
news-image

மூன்றாவது முறையாக இணையும் தமன் அக்ஷன்...

2025-07-14 14:33:53
news-image

நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் புதிய...

2025-07-14 14:27:32
news-image

பூஜையுடன் தொடங்கிய 'விஷால் 35'

2025-07-14 14:10:36