தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகைகளான ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படம் தன்பாலின சேர்க்கையாளர்களின் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'. இத்திரைப்படத்தில் அர்ஷத், ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா, ஆறுமுகவேல், ஆர் ஜே பிரதீப் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்திருக்கிறார். தன் பாலின சேர்க்கையாளரின் காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்திற்காக இசை பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் நடிகையும், தயாரிப்பாளருமான நீலிமா இசை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' எம்முடைய உதவியாளர் ஒருவர் தன் பாலின சேர்க்கையாளர். அவரின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. ஆண், பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை போல் தன் பாலின சேர்க்கையாளர்களுக்கும்.. அவர்களின் உணர்வுபூர்வமான உறவுகளை மதித்து, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான பிறகு இது தொடர்பான சர்ச்சையும், விவாதமும் எழும். இது சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு பயன்படும் என நம்புகிறேன்'' என்றார்.
இந்தத் திரைப்படம் படமாளிகையில் வெளியாகாமல் நேரடியாக ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் திகதியன்று வெளியாகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM