இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Lands, கடந்த 2020ஆம் ஆண்டில் முதன் முறையாக கூட்டாண்மை பிரிவில் தங்க விருதை சுவீகரித்திருந்ததையடுத்து, இரண்டாவது தடவையாகவும், www.primelands.lk என்ற அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு 13ஆவது BestWeb.lk 2023 போட்டியில் தங்க விருதை சுவீகரித்துள்ளது.
ஆகஸ்ட் 9ஆம் திகதி Imperial Monarchஇல் கோலாகலமாக நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வில் இந்த விருது Prime Landsக்கு வழங்கப்பட்டது. இதில் முன்னணி டிஜிட்டல் புத்தாக்க செயற்பாட்டாளர்கள் மற்றும் தூர நோக்க செயற்பாட்டாளர்கள் ஒன்றுகூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொருளடக்கத்தின் புத்தாக்கத்திறன், கிராபிக் வடிவமைப்பின் தரம், கலையம்சம், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் BestWeb.lk விருதுக்காக மீளாய்வு செய்யப்பட்டிருந்தது.
இந்த சாதனையினூடாக Prime Landஇன், டிஜிட்டல் மேம்படுத்தல் சிறப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இணையத்தளத்தின் வடிவமைப்பு மற்றும் செயற்பாடு மற்றும் உறுதியான இணைய பிரசன்னம் ஆகியன உறுதி செய்யப்பட்டுள்ளன.
தொழில்நுட்பத்தினூடாக வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் குழுமத்தின் வர்த்தக நாம நோக்கத்தை மேம்படுத்தும் வகையில் இந்த கௌரவிப்பு அமைந்திருப்பதுடன், இணையத்தளத்தினூடாக ஒப்பற்ற சொத்து விளக்கம், live chat ஊடாக உடனுக்குடன் உதவி மற்றும் மெய்நிகர் பயணங்கள் போன்றன வழங்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன், தொழிற்துறையில் நியமங்களை நிர்ணயிப்பதாகவும் அமைந்துள்ளது.
மேலும், குழுமத்தின் முன்னுரிமை கொள்கைகளான தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்கள் அனுபவ மேம்படுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இந்த விருது அமைந்துள்ளது. சிறந்த கூட்டாண்மை இணையத்தள விருதை வெற்றியீட்டியுள்ளமையின் ஊடாக வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்தும் சௌகரியம், ஒப்பற்ற தொடர்பாடல்கள் மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் ஆகியவற்றில் குழுமம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்படுகிறது.
Prime Lands Pvt Ltd பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்த உயர் பிரிவில் வெற்றியாளராக Prime Lands தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன் உறுதியான, வாடிக்கையாளருக்கு நட்பான மற்றும் நினைவில் நிற்கும் இணையத்தளம் ஆகியவற்றினூடாக இந்த வெற்றியைப் பெற முடிந்தது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரியல் எஸ்டேட் துறையில் புத்தாக்கத்தை ஏற்படுத்தும் நிகரற்ற அர்ப்பணிப்புக்கு சான்றாக இந்த விருது அமைந்துள்ளது. இவற்றினூடாக ஒப்பற்ற சௌகரியம், நவீனத்துவம் மற்றும் நம்பிக்கை ஆகியன தோற்றுவிக்கப்படுகின்றன.
இந்த பெருமைக்குரிய தங்க விருதினூடாக மக்களின் நிஜ மற்றும் மெய்நிகர் வாழ்க்கைப் பயணத்தில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றியை ஏற்படுத்தும் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
நடுவர் குழுவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, Prime Landஇன் அர்ப்பணிப்பான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணிகளின் இணைந்த முயற்சியினூடாக, இணையத்தளத்தின் வடிவமைப்பு பங்காளரான Tek Geeks Pvt Ltdஇன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி இந்த விருதை சுவீகரிக்க முடிந்தது.
வருடாந்தம் LK Domain Registryஇனால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வாக BestWeb.lk விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்திருப்பதுடன், இலங்கையின் முன்னணி இணையத்தள போட்டியாக நன்மதிப்பு பெற்ற ஸ்தானத்தைக் கொண்டுள்ளது.
நிறுவனங்களின் டிஜிட்டல் நிபுணத்துவம் மற்றும் திறமைகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் அமைந்துள்ளது. இணையத்தளங்கள் அவற்றின் தோற்றம், பாவனையாளர்களுக்கு பயன்படுத்த இலகுத்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM