நகர்னோ கரபாக்கில் ஆர்மேனிய இனத்தவர்கள் இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பை எதிர்கொள்கின்றனர் என துருக்கியின் 123 கல்விமான்கள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளராக இருப்பதற்கு பதில் புதிய மனித துயரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நகர்னோ கரபாக்கை 9 மாதங்களாக தன்னுடைய முற்றுகையின் கீழ் வைத்திருந்தஅஜர்பைஜான் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடர் இடம்பெறுகாலப்பகுதியில் அந்த பகுதிமீது முழுமையான தாக்குதலைமேற்கொண்டது என கல்விமான்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
முழு உலகமும் என்ன நடக்கின்றது என்பதை மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க துருக்கி மற்றும் இஸ்ரேலின் வெளிப்படையான ஆதரவுடனேயே அஜர்பைஜான் இந்த தாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள துருக்கியின் கல்விமான்கள் இனச்சுத்திகரிப்பு இனப்படுகொலைக்கான வாய்ப்புகள் உள்ளமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞர் தெரிவித்தது உண்மையாகின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நகர்னோகரபாக் மீதான முற்றுகையை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் விடுத்த வேண்டுகோளை அஜர்பைஜான் புறக்கணித்துள்ளது என தெரிவித்துள்ள துருக்கி கல்விமான்கள் மோதல்களை நிறுத்துமாறு விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் அஜர்பைஜான் ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
அஜர்பைஜான் நகர்னோ கரபாக்கைமுழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரமுயல்கின்றது பல நூறு வருடங்களாக ஆர்மேனியர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேற்ற முயல்கின்றது என தெரிவித்துள்ள அவர்கள் அதனை எதிர்த்தால் ஆர்மேனியர்கள் கொல்லப்படும் ஆபத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வாதிகார அஜர்பைஜானின் குறிக்கோள் ஆர்மேனியர்களின் இருப்பை வலுக்கட்டாயமாக முடிவிற்கு கொண்டுவருவதே எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM