தமிழ் நாட்டில் அதிமுக கட்சியின் தொழிநுட்ப பிரிவு நடத்திய, தொலைபேசி ஆதரவு கணக்கெடுப்பு ஆரம்பித்து 48 மணித்தியாலயங்களில், சுமார் 33 இலட்சம் பேர், தமது ஆதரவை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வழங்கியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

கடந்த சில தினங்களாகவே தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவதற்காக தமிழகம் மற்றும் ஏனைய மாநிலங்களிலிருந்தும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கான மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில் சசிகலாவிற்கு ஆதரவளித்து வந்த அதிமுக கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் குறிப்பிட்ட சில நடிகர்கள், தற்போது முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தமது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

  

குறித்த உறுப்பினர்கள், அவர்களது தொகுதி மக்கள் நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவளிக்கும்படி கோரிவந்த நிலையில், பன்னீர் செல்வம் பக்கம் மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.