ஈராக்கில் திருமணநிகழ்வொன்றின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்குஈராக்கில் திருமணநிகழ்வொன்றின் போது ஏற்பட்ட தீ விபத்தில் மணமக்கள் உட்பட 100 பேர் உயிரிழந்துள்ளனர் 150 பேர் காயமடைந்துள்ளனர்.
அல்ஹம்டனியா மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் வெளியாகதபோதிலும் பட்டாசுகள் கொழுத்தப்பட்ட பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்துவதற்காக போராடுவதையும் எரியுண்ட உடல்களையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகின்றன.
மீட்புபணிகளில் தீயணைப்புவீரர்கள் ஈடுபடுவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகின்றன.
தீவிபத்து ஏற்பட்டவேளை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திருமண கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மண்டபத்திலிருந்து தீ வெளியே வருவதை நாங்கள் பார்த்தோம் உள்ளே சிக்குண்டிருந்த சிலர் தப்பினார்கள் வெளியேற முடியாதவர்கள் உள்ளே சிக்குண்டனர் என தீவிபத்திலிருந்து உயிர் தப்பிய 34 வயது இமாட் யொகான தெரிவித்துள்ளார்.
மணமகனும் மணமகளும் நடனமாடிக்கொண்டிருந்தவேளை கூரையில் தீப்பற்றியது முழு கட்டிடமும் தீப்பிடித்தது என கையில் காயங்களுடன் உயிர்தப்பிய ரணியா வாட் தெரிவித்துள்ளார்.
எங்களால் எதனையும் பார்க்கதுடியவில்லை மூச்சுதிணறியது எப்படி வெளியேறுவது என தெரியாதநிலைக்குதள்ளப்பட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM