பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

Published By: Vishnu

26 Sep, 2023 | 08:01 PM
image

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமை (26) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர். 

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஜ் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். 

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற், கலாசார ஒத்துழைப்புக்கான துணைத் தூதுவர் ஒலிவியா பெலீமியர் மற்றும் பிரான்ஸ் தூதரகத்தின் ஊடகத் தொடர்பாடல் அதிகாரி டினுசா இல்லப்பெருமா ஆகியோர் அடங்கிய குழுவினரே செவ்வாய்க்கிழமை (26) காலை யாழ்ப்பாணப் செய்தனர்.

பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழுவினரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன், கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடினர். 

சமகால விடயங்கள் மற்றும் பிரான்ஸ் தூதரகத்தினூடாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முன்னெடுக்கப்படும் கற்றல் மற்றும் ஆராய்சி செயற்றிட்டங்களின் மீளாய்வு குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37