சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் ; சர்வதேச சுற்றுலா தினம்

Published By: Vishnu

26 Sep, 2023 | 07:45 PM
image

கலாநிதி திருமதி சுபாஜினி உதயராசா

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலாவில் நாட்டின் பொருளாதாரமும் உண்டு என்பதை விபரிக்கும் நோக்கிலும் உலக சுற்றுலாதினம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொனிப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் உலக சுற்றுலா அமைப்பு 2023ஆம் ஆண்டிற்கான உலக  சுற்றுலா தினத் தொனிப்பொருளாக “சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்” என்பதைக்  குறிப்பிட்டுள்ளது. சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில் செப்டெம்பர் 27ஆம் திகதியை உலக சுற்றுலாதினமாக 1970 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து அறிவித்தது. 

அவ்வகையில் உலக சுற்றுலா தினம் உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் 1980ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இது சுற்றலாவிலிருந்து பெறப்பட்ட மதிப்புமிக்க சமூக-பொருளாதார பங்களிப்புகள் மற்றும் அதன் தொலைநோக்கு தாக்கம் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த நியமிக்கப்பட்ட நாள்.

கலாசார பரிமாற்றம், பரஸ்பர புரிதல், நிலையான வளர்ச்சி மற்றும் அமைதி போன்ற பல்வேறு அம்சங்களை இச்சுற்றுலா கொண்டுள்ளது. இப்போது சுற்றுலா என்பதுதான் உலகின் மிகப்பெரிய தொழிலாக உள்ளது. உலக பொருளாதாரத்தில் இரண்டாவது பங்களிப்பு சுற்றுலாவினால் தான் கிடைக்கிறது. 

உணவகம், தங்குமிடம், பொழுதுபோக்குத் தலங்கள், போக்குவரத்து, வணிக விற்பனையகங்கள் என ஐந்து முக்கிய துறைகளை  சுற்றுலா உள்ளடக்கியுள்ளது. “இன்பப் பொழுதுபோக்கிற்காகப் பயணம் மேற்கொள்;ளுதல் அல்லது பயணிகளுக்கு வழிகாட்டுதல், சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுத்தல் முதலிய பணிகளைச் செய்யும் தொழிலகம் சுற்றுலா” எனப்படும் என பிரிட்டானியா கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.

‘எவரொருவர் எவ்வித குறிக்கோளும் இன்றி தனது நாட்டின் எல்லையைக் கடந்து பிறநாட்டில் தற்காலிகமாகத் தங்கி, தான் வேறு எங்கோ ஓரிடத்தில் ஈட்டிய பணத்தை அங்கு செலவிடுகிறாரோ அவரே சுற்றுலாப் பயணி ஆவார்’. சுற்றுலாக் கழகம் ‘ஒரு நாட்டில் குறைந்தளவு 24 மணி நேரமாவது பயணம் செய்பவர் சுற்றுலாப்பயணி’ என வரையறை செய்துள்ளது.

உலக சுற்றுலா தினத்தின் நிறம் நீலம் ஆகும். இந்த வருடம் உலக சுற்றுலா தினத்தை நடத்தும் நாடு சவூதி அரேபியா ஆகும். 

உலக சுற்றுலா மாநாடு 1963ஆம் ஆண்டு உரோம் நகரில் ஐக்கிய நாடுகள் சபையில் உலக சுற்றுலா மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

வளர்ந்து வரும் நாடுகள் சுற்றுலாத் துறைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துச் சுற்றுலாத் துறையை வளர்க்க வேண்டும்.

வளர்ந்து வரும் நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிதியிலிருந்து நீண்ட காலத் தவணையிலும் குறுகிய காலத்திட்டத்திற்கும் கடன் பெறலாம்.

உலகம் முழுவதும் சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருகிறது. மக்கள் புதிய சுற்றுலா மையங்களிற்குச் செல்ல ஆர்வம் கொண்டுள்ளனர். எனவே ஒவ்வொரு நாடும் புதிய சுற்றுலா மையங்களை உருவாக்க வேண்டும் என்று அறிவுரை கூறியது.

மலையேறுதல், குளிர்கால விளையாட்டுக்கள், மீன் பிடித்தல், வேட்டையாடுதல், கடற் கரைகள், மருத்துவ குணமுள்ள நீரூற்றுக்கள், தேசிய பூங்காக்கள், விளையாட்டுக்கள், பறவை, விலங்குகளின் சரணாலயங்கள், தேசிய நினைவுச்சின்னங்கள், அந்நாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள், நாகரிகம், பண்பாட்டுச் சின்னங்கள், புனிதப் பயணம் மேற்கொள்ளல், திருவிழாக்கள் போட்டி விளையாட்டுக்கள் என்பவற்றை மிகுதிப்படுத்த வேண்டும்.

சுற்றுலா வகைகள்

சுற்றுலாவின் பிரதான வகைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். மருத்துவ சுற்றுலா, குளிர்கால சுற்றுலா, தன்னார்வ சுற்றுலா, அனுபவங்களின் சுற்றுலா, நீர் சுற்றுலா, , நிலையான சுற்றுலா, கோடை அல்லது சூரியன் மற்றும் கடற்கரை விடுமுறை சுற்றுலா, ஆரோக்கிய சுற்றுலா, கடைசி வாய்ப்பு சுற்றுலா, கலாசார சுற்றுலா, தொல்பொருள் சுற்றுலா, மத சுற்றுலா, யாத்திரை சுற்றுலா, கலாசார பாரம்பரிய சுற்றுலா, வெகுஜன சுற்றுலா, சாகச பயணம், வேளாண் சுற்றுலா, முக்கிய சுற்றுலா, விளையாட்டுச் சுற்றுலா, வணிக சுற்றுலா, வனவிலங்கு சுற்றுலா, மது சுற்றுலா, இசை சுற்றுலா, விசாலமான சுற்றுலா, சைக்கிள் ஓட்டுதல், திரைப்பட சுற்றுலா, இன்பச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, அரசியல் சுற்றுலா, சங்கச் சுற்றுலா, ஓய்வுச் சுற்றுலா, சூழலியல் சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, போன்றனவாகும். இவற்றினை உள்நாட்டுச் சுற்றுலா, வெளிநாட்டுச் சுற்றுலா என இரு பெரும் பிரிவிற்குள் உள்ளடக்கலாம். 

இலங்கையில் சுற்றுலாத்துறை 

சுற்றுலாத்துறைக்கு பெயர்பெற்ற நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. இங்கு ஆடைக் கைத்தொழிலுக்கு அடுத்த நிலையில் சுற்றுலாத்துறை காணப்படுகிறது. இலங்கையில் நிலவுகின்ற உவப்பான வானிலை நிலைமைகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இயற்கை அழகுடன் கூடிய கடற்கரைகள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள், தேசிய வனவிலங்கு சாலை, தேசியப் பூங்காக்கள் போன்ற சுற்றுலா பகுதிகள் இலங்கையில் பிரபல்யம் பெற்றுள்ளன. 

இந்நாட்டுக்கே உரித்தான கைப்பணிப் பொருட்கள், ஆயுள்வேத மருந்துகள், சமையற் கலைகள் (உணவுகள்- ஒடியற் கூழ், பனாட்டு, புளுக்கொடியல், பனங்கட்டி) சம்பிரதாய மரபுகள் போன்றனவும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ள விடயங்களாகும். உவப்பான காலநிலையைக் கொண்ட நுவரெலியாவிற்கு ஏப்ரல் மாதத்திலும், சமயத்துடனும், பொழுதுபோக்குடனும் தொடர்புடைய சிவனொளிபாத மலைக்கு மார்ச் மாதம் முதல் யூலை மாதம் வரையிலும், மே மற்றும் ஜுன் மாதங்களில்  அநுராதபுரத்திற்கும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர். 

தென்னிலங்கையில் வாழ்பவர்கள் வட இலங்கைக்கான சுற்றுலாவை அதிகளவில் விரும்புகின்றனர். உலக சுற்றுலா நிறுவனத்தினால் உலகில் சுற்றுலாவை மேற்கொள்ளலாம் என அடையாளப்படுத்தப்பட்ட 302 பாரம்பரிய அமைவிடங்களில் ஆறு (06) அமைவிடங்கள் இலங்கையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு 1937ஆம் ஆண்டு ‘சுற்றுலாப் பணியகம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அதன் பின் 1966ஆம் ஆண்டு ‘இலங்கை சுற்றுலா சபை’  என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு முதலாவது ஐந்து நட்சத்திர ஹோட்டல் நிறுவப்பட்டது. இவை யாவும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கான மைல் கற்களாகும். 1948ஆம் ஆண்டு ஏறத்தாழ 21,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இலங்கையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 328 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்ததுடன், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 71 ஆயிரத்து 370 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தந்திருந்தனர்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 166,975 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு சுற்றுலாப் பயணி கூட நாட்டிற்கு வருகை தரவில்லை என இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது. 2019ஆம் ஆண்டு முழுகையாக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,913,702 பேர் ஆக காணப்பட இது 2020ஆம் ஆண்டு முழுமையாக 507,704 பேராகவே காணப்பட்டது. 2020ஆம் ஆண்டு மார்கழி மாதம் மட்டும் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெறும் 393 பேரே ஆகும். 

இலங்கைக்கு 2020ஆம் ஆண்டு ஏப்ரல், மே, யூன், யூலை, ஆகஸ்ட், செப்ரெம்பர், ஒக்ரோபர், நவம்பர் ஆகிய எட்டு மாதங்களில் கொவிட்-19 தொற்றுக் காரணமாக ஒரு சுற்றுலாப் பயணி கூட வருகை தரவில்லை. இலங்கைக்கு அன்னிய செலவாணியை பெற்றுத் தரும் பிரதான துறையாக சுற்றுலாத்துறை விளங்குகிறது.

நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வகையான வேலை வாய்ப்புக்களை சுற்றுலாத்துறை வழங்குகின்றது. 1998ஆம் ஆண்டு 14,816 மில்லியன் ரூபாவினை அன்னியச் செலவாணியாகப் பெற்றுள்ளது. இலங்கை வரலாற்றில் சுற்றுலாத்துறை மூலம் அதிக அளவிலான வருமானம் கிடைத்த ஆண்டாக 2018ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.

2018ஆம் ஆண்டில் 2,333,796 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததுடன் அவர்களின் ஊடாக அந்த ஆண்டு 4,380.6 மில்லியன் அமெரிக்கா டொலர் வருமானம் கிடைத்திருந்தது. அதேவேளை 2019ஆம் ஆண்டு, சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு 3,606.9 மில்லியன் அமெரிக்கா டொலரும் 2020ஆம் ஆண்டு 682 மில்லியன் அமெரிக்கா டொலரும் வருமானமாகக் கிடைத்துள்ளது. வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்ந்த இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் பாரிய பின்னடைவை நோக்கி நகர்ந்துள்ளமை, இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின் மூலம் காணக்கூடியதாக உள்ளது. 

1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் இளைஞர் கிளர்ச்சி காரணமாக இத்தொழிற்றுறையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 1983ஆம் ஆண்டு யூலை மாதத்தில் ஏற்பட்ட இனப் பிரச்சினை காரணமாகவும் 1996இல் ஏற்பட்ட மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல், மற்றும் சுற்றுலா மையங்களில் காணப்பட்ட பதற்ற நிலைமை, 30 வருடகாலமாக நிகழ்ந்த உள்நாட்டு யுத்தம், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடந்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்கள, உலகில் 2019ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் 2020 மார்ச் மாதத்திற்குப் பின்பு மோசமான நிலைமை போன்றன காரணமாகவும் சுற்றுலாத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

எனினும் 2021ஆம் ஆண்டு 195,000 இற்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வருகை தந்துள்ளார்கள் என இலங்கையின் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.  2022ஆம் ஆண்டு முழுமையாக (ஐனவரி தொடக்கம் டிசெம்பர் வரை) உலகின் 187 நாடுகளில் இருந்து 719,978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள்.

இந்த வருடம் (2023) ஐனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான நான்கு மாத காலப் பகுதியில் உலகின் 177 நாடுகளில் இருந்து 441,177 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள். 2023 ஐனவரியில் 161.80 அமெரிக்க டொலராக இருந்த இலங்கையின் சுற்றுலா வருமானம் பெப்ரவரியில் 169.90 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. 

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12வீதத்தை சுற்றுலாத் துறையானது கொண்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஐனவரி தொடக்கம் மார்ச் வரை) மதிப்பிடப்பட்ட சுற்றுலாத் துறையில் கிடைத்த வருமானம் 529.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். பயணத் தளமான பயண முக்கோணத்தின் (வுசயஎநட வுசயைபெடந) மூலம் 2023ஆம் ஆண்டில் பார்வையிடும் சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

முக்கோணத்தின்படி தங்கக் கடற்கரைகள், வன விலங்குகள் நிறைந்த காடுகள் உருளும் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பனி மூடிய மலைகள் ஆகியவை இலங்கையை ஆசிய நாடுகளுக்குச் செல்ல சிறந்த நாடுகளில் ஒன்றாக உருவாக்கி உள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ 2023ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் எனவும், 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இலங்கை அடைய திட்டமிட்டுள்ளார். 

 2023 செப்டெம்பர் 27 ஆம் திகதி வரும் 2023ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுவதற்காக இலங்கையின் சுற்றுலாத்துறை உற்சாகமான தொடர் நிகழ்வுகளுக்கு தயாராகி வருகிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையானது சுற்றுலாத்துறையில்  பசுமை முதலீடுகள் மற்றும் குறுகிய, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி, செப்ரெம்பர் 25-27 வரை பல நிகழ்வுகளை நடாத்த திட்டமிட்டுள்ளது. இலங்கை தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஒரு ஊக்கமளிக்கும் எழுச்சியை அனுபவித்து வருகிறது. ஆகஸ்ட் தொடக்கத்தில் 900, 000 இலக்கை எளிதாகத் தாண்டியது. 

2022ஆம் ஆண்டு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 719, 978ஐத் தாண்டியுள்ளது. செப்ரெம்பர் கடைசி வாரத்தில் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் உலக சுற்றுலாதின கொண்டாட்டத்திற்கு இது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தக் கொண்டாட்டங்கள் சுற்றுலாத் துறையை மிகவும் நிலையானதாகவும், பொறுப்பானதாகவும், சமூகம் சார்ந்ததாகவும் மறுபரிசீலனை செய்வதற்கும், மறுவடிவமைப்பதற்கும் உலகளாவிய முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பசுமை முதலீடுகள் மற்றும் நிலையான நடைமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சுற்றுலாவின் நன்மைகளை சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் கருத்தில் சமநிலைப்படுத்தும் ஒரு முன்னணி இடமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

சுற்றுலா மனித வாழ்வுடன் இணைந்து, பிணைந்து சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தையும், உலக மக்களிடையே நல்லெண்ணங்களையும் வளர்க்கிறது. ஒரு நாட்டின் அந்நியச் செலாவணியைப் பெருக்கி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்துகிறது. இது இன்று இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில்; ஒரு முக்கியமான தொழில் துறையாக அமைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாவையின் இறுதிச் சடங்குகளில் வீணான பிரச்சினைகளை...

2025-02-08 16:54:26
news-image

நிலையான தீர்வுகளுக்கான தேசிய கொள்கை அவசியம்...

2025-02-07 11:00:58
news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21