(எம்.வை.எம்.சியாம்)
மீகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள தளபாட விற்பனை நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் ஊழியர்களிடத்தில் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி 75 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
குறித்த தளபாட விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீகொட பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மீகொட, 20 இலக்க கட்டைப் பகுதியில் அமைந்துள்ள தளபாட விற்பனை நிலையத்தில் நேற்று முன்தினம் நண்பகல் 2 மணி அளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த இருவர் தலைக்கவசம் அணிந்து அங்கிருந்த ஊழியர்களிடத்தில் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் பணியாளர்களை இரண்டாம் மாடிக்கு அழைத்து சென்று பணம் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் இரகசிய இலக்கத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சுமார் 75 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM